- Advertisement -
விஜய் நடிக்கும் தி கோட் படத்தின் அப்டேட் இன்று வௌியாகும் என்று புதிய போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். கல்பாத்தி எஸ் அகோரம் இத்திரைப்படத்தை தயாரிக்கின்றனர். படத்தில், மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா, மைக் மோகன், பிரசாந்த் மற்றும் பிரபுதேவா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


பிரேம்ஜி உள்பட பலர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகள் மற்றும் சென்னை என மாறி மாறி நடைபெற்று வந்தது. இறுதியாக புதுச்சேரி மற்றும் இலங்கையில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தது. இப்படத்தில் விஜய், தனது காட்சிகளுக்கான டப்பிங்கையும் நிறைவு செய்துவிட்டார். இதைத் தொடர்ந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

