தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ படத்திற்கு பிறகு தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார். தற்காலிகமாக தளபதி 68 என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இதனை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த படத்தின் பூஜை இன்று தொடங்கப்பட்டுள்ளது. பூஜை சம்பந்தமான புகைப்படங்களும் வீடியோவும் லியோ படத்தின் ரிலீஸுக்கு பிறகு வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதேசமயம் நாளை தளபதி 68 படத்தின் படப்பிடிப்புகள் ஒரு பாடலுடன் தொடங்க இருக்கின்றன என்று தகவல்கள் கசிந்துள்ளது.

இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பிரியங்கா மோகன், ஸ்னேஹா, மீனாட்சி சவுத்ரி, ஜெய், அபர்ணாதாஸ், மைக் மோகன், பிரபுதேவா உள்ளிட்ட பலர் நடிக்க இருக்கின்றனர் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


