Homeசெய்திகள்சினிமாவிஜய் சேதுபதியின் மகாராஜா படத்திற்கு தணிக்கைக்குழுவின் சான்றிதழ்

விஜய் சேதுபதியின் மகாராஜா படத்திற்கு தணிக்கைக்குழுவின் சான்றிதழ்

-

- Advertisement -
kadalkanni
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தையும், தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் ஏற்படுத்தி இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இன்று அவர் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தமிழ் சினிமாவை தாண்டி இந்திய சினிமாவின் நடிகர் என்ற அடையாளத்தை பெற்றுள்ளார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து கலக்கி வருகிறார். தற்போது ஹீரோவாக மட்டுமன்றி வில்லனாகவும் கலக்கி வருகிறார்.

விஜய் சேதுபதி நடிப்பில் இறுதியாக மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் வெளியானது. தமிழ் மற்றும் இந்தி மொழியில் வௌியான இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்தார். இதைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் திரைப்படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை இரண்டாம் பாகத்திலும் அவர் நடித்து வருகிறார். இதனிடையே, விஜய் சேதுபதி தனது 50-வது திரைப்படமான மகாராஜா படத்தில் நடித்திருக்கிறார்.

இத்திரைப்படத்தை, குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் இயக்கியிருக்கிறார். இதில் விஜய் சேதுபதியுடன் பாரதிராஜா, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி நட்ராஜ் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வரும் ஜூன் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் புரமோசன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அத்துடன் படத்திற்கு தணிக்கைக் குழு யுஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறது.

MUST READ