விக்ரம் பிரபுவின் பாயும் ஒளி நீ எனக்கு திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்ரம் பிரபுவின் நடிப்பில் வெளியான திரைப்படம் பாயும் ஒளி நீ எனக்கு. இப்படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்க தனஞ்ஜெயா வில்லனாக நடித்திருந்தார்.
இவர்களுடன் விவேக் பிரசன்னா, ராமவேல் மூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மகாலட்சுமி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு மகதி ஸ்வர சாகர் இசையமைத்திருந்தார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
ஒரு வித்தியாசமான ஆக்சன் திரில்லர் கதை களத்தில் உருவான திரைப்படம் கடந்த ஜூன் 23ஆம் தேதி வெளியாகி அளவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் இந்த படம் வருகின்ற ஜூலை 21ஆம் தேதி சிம்ப்ளி சௌத் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.