spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதங்கலான் ஷூட்டிங் ஓவர்.... கனவுலகில் வாழ வைத்த ரஞ்சித்திற்கு நன்றி...... நடிகர் விக்ரம்!

தங்கலான் ஷூட்டிங் ஓவர்…. கனவுலகில் வாழ வைத்த ரஞ்சித்திற்கு நன்றி…… நடிகர் விக்ரம்!

-

- Advertisement -

விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

விக்ரம், பா ரஞ்சித் கூட்டணியில் தங்கலான் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் நடிக்கின்றனர். படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் நீலம் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

we-r-hiring

படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். இது கோலார் சுரங்கத்தில் தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை பற்றி விவரிக்க கூடிய படமாகும்.தொடக்கத்தில் படப்பிடிப்பின் போது விக்ரம் இருக்கு விபத்து ஏற்பட்ட நிலையில் படப்பிடிப்பு சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின் கடப்பா சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

தற்போது விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளதாக
தெரிவித்துள்ளார்.

அதில், ” இத்துடன் நிறைவடைந்தது, என்ன ஒரு பயணம்!! அற்புதமான சிலருடன் பணியாற்றியுள்ளேன். ஒரு நடிகராக உற்சாகமான அனுபவங்களையும் பெற்றுள்ளேன்.
முதல் போட்டோவிற்கும் கடைசி போட்டோவிற்கும் இடையே 118 நாட்கள் தான் இருந்தன. இந்த கனவுலகில் வாழ வைத்த ரஞ்சித்திற்கு ஒவ்வொரு நாளும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ