- Advertisement -
விமல் நடிக்கும் தேசிங்கு ராஜா படத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு தமிழில் வெளியான திரைப்படம் தேசிங்கு ராஜா. இப்படத்தில் விமல் நாயகனாக நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக பிந்துமாதவி நடித்திருந்தார். படத்தில் சூரி, சிங்கம் புலி, உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். எழில் இப்படத்தை இயக்கினார். இரு குடும்பங்களுக்கு ஏற்பட்ட பரம்பரை பிரச்சனையை மிகவும் எதார்த்தமாக நகைச்சுவையாக காட்டியிருப்பர். இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வெற்றி பெற்றது.




