Homeசெய்திகள்சினிமா'மனசிலாயோ' வர்மனுக்கு கிடைத்த வெற்றி..... ஜெயிலர் பட அனுபவம் குறித்து பகிர்ந்த விநாயகன்!

‘மனசிலாயோ’ வர்மனுக்கு கிடைத்த வெற்றி….. ஜெயிலர் பட அனுபவம் குறித்து பகிர்ந்த விநாயகன்!

-

நடிகர் விநாயகன் ஜெயிலர் பட அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

ரஜினி, நெல்சன் கூட்டணியில் ஜெயிலர் திரைப்படம் உருவாகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான படம் தற்போது வரை தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன் ,வசந்த் ரவி ,விநாயகன், யோகி பாபு, ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பான் இந்திய நடிகர்கள் ஒன்று கூடிய இந்த படம் உலகம் முழுவதும் மெகா பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் விநாயகன் வில்லனாக மிரட்டி இருந்தார். விநாயகனின் வர்மன் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்படுகிறது. குறிப்பாக தமிழும் மலையாளமும் கலந்த அவரின் பேச்சும், அவருக்கான வசனங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

இது குறித்து விநாயகன் ஜெயிலர் படத்தில் அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். “ஜெயிலர் படத்தில் தனது கதாபாத்திரம் வெளியில் செல்ல முடியாத அளவிற்கு வெற்றி பெற்றுள்ளது. கனவில் கூட நான் இதை நினைத்து பார்க்கவில்லை. இந்த அளவு வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. நெல்சனுக்கும் ரஜினிக்கும் கலாநிதி மாறனுக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ