Homeசெய்திகள்சினிமாகமல்ஹாசனின் 233 வது படம் குறித்து இயக்குனர் ஹெச். வினோத் சொன்ன ரகசியம்!

கமல்ஹாசனின் 233 வது படம் குறித்து இயக்குனர் ஹெச். வினோத் சொன்ன ரகசியம்!

-

பிரபல நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 233 வது படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

கமல்ஹாசன், சங்கர் கூட்டணியில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கமல் பிரபாஸ் நடிக்கும் ப்ராஜெக்ட் திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்த இரு படங்களுமே மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகி வருகிறது.

இந்நிலையில் கமல்ஹாசன் தனது 233 வது படத்தை ஹெச் வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் கமல்ஹாசன் மற்றும் ஆர் மகேந்திரன் இணைந்து தயாரிக்கவுள்ளனர். இது சம்பந்தமான அறிவிப்பை சமீபத்தில் படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தனர். அந்த வகையில் இந்த படம் ஒரு புரட்சிகரமான படமாகவும் சமூக கருத்துக்களை வெளிப்படுத்தும் விதத்திலும் உருவாக இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. மேலும் இப்படம் விவசாயம் சம்பந்தமான கதைக்களத்தில் தயாராக உள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது இது குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் இயக்குனர் ஹெச். வினோத், “கமல்ஹாசன் உடன் நான் இயக்கும் திரைப்படம் விவசாயம் சம்பந்தமான கதை இல்லை. நாங்கள் இருவரும் 2, 3 கதைகள் பற்றி விவாதித்தோம். அதில் கமல்ஹாசன் சார் சொன்ன கதை மிகவும் சுவாரசியமாக இருந்தது. அதனால் நான் அந்த கதைக்கு திரைக்கதை எழுத முடிவு செய்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.

MUST READ