கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இது தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் ப்ராஜெக்ட் கே திரைப்படத்தில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் கமல்ஹாசனின் 233 வது படம் குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய ஹெச். வினோத் ‘KH233‘ படத்தை எழுதி இயக்குகிறார். மேலும் கமல்ஹாசன் மற்றும் ஆர் மகேந்திரன் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

தற்போது இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
And it begins…#RKFI52 #KH233
#RISEtoRULE #HVinoth #Mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/7cej87cghE— Kamal Haasan (@ikamalhaasan) July 4, 2023
அந்த வீடியோவில் “KH233 RISE TO RULE ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வீடியோ முழுவதும் சிகப்பு நிறத்துடனும், கமல் தீப்பந்தத்துடன் இருப்பது போன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்படத்தின் கதை ஒரு புரட்சிகரமான கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் சமூக கருத்துக்களை எடுத்துக்கூறும் விதமாகவும் உருவாகும் என்று தெரியவந்துள்ளது.


