Homeசெய்திகள்சினிமா25 வருட கனவு..... மிஷ்கின் குழந்தையை தத்தெடுத்த விஷால்....'துப்பறிவாளன் 2' அப்டேட்!

25 வருட கனவு….. மிஷ்கின் குழந்தையை தத்தெடுத்த விஷால்….’துப்பறிவாளன் 2′ அப்டேட்!

-

- Advertisement -

நடிகர் விஷால், கடைசியாக மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து ஹரி இயக்கத்தின் ரத்னம் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அடுத்ததாக துப்பறிவாளன் 2 படத்தை கையில் எடுத்துள்ளார் விஷால். 25 வருட கனவு..... மிஷ்கின் குழந்தையை தத்தெடுத்த விஷால்....'துப்பறிவாளன் 2' அப்டேட்!ஏற்கனவே மிஸ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தில் விஷால் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வெற்றி படமாக அமைந்தது. அதே சமயம் துப்பறிவாளன் 2 திரைப்படம் உருவாகி வரும் வேளையில் மிஸ்கினுக்கும் விஷனுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக துப்பறிவாளன் 2 கைவிடப்பட்டது. அதன் பின்னர் விஷாலின் துப்பறிவாளன் 2 படத்தை இயக்க இருப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் விஷால், “25 ஆண்டுகளுக்கு முன்பாக என்னவாக வேண்டும் என்று திரைத்துறையில் நுழைந்தேனோ அந்த கனவு இப்போது நனவாக போகிறது. இயக்குனராக வேண்டும் இன்று என் அப்பாவிடம் கேட்டபோது அவர்தான் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக சேர்த்துவிட்டார்.

இத்தனை ஆண்டு காலம் ரசிகர்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி. துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க போகிறது. ஒரு இயக்குனராக உங்கள் உன்னால் பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மிஸ்கின் சாருக்கு நன்றி. மிஸ்கினின் குழந்தையை நான் தத்தெடுத்திருக்கிறேன். அந்த குழந்தையை சிறப்பாக கரை சேர்ப்பேன்” என்று வீடியோ ஒன்றை வெளியிட்டு துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு குறித்த அப்டேட்டை தெரிவித்துள்ளார்.

MUST READ