- Advertisement -
விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் ரத்னம் படத்தின் முன்னோட்டம் இணையத்தில் வௌியாகி உள்ளது.

கோலிவுட்டில் தவிர்க்க முடியாத முன்னணி நாயகன் விஷால். காதல், காமெடி, ஆக்ஷன், அதிரடி என அனைத்து விதமான கதைக்களத்திலும் நடித்து உச்ச நடிகராக வலம் வருகிறார். செல்லமே படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகிற்கு அறிமுகமான அவர், சண்டக்கோழி, திமிரு, சத்யம், அவன் இவன், தாமிரபரணி, துப்பறிவாளன், உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். செல்லமே படத்தின் வெற்றிக்கு பிறகு விஷால் நடித்த சண்டக்கோழி திரைப்படம் அவரை ஆக்ஷன் நாயகனாக முன்னிறுத்தியது. விஷால் நடிப்பில் இறுதியாக வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.




