spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநிச்சயம் இந்த படம் சிரிப்பலையை ஏற்படுத்தும்..... 'மதகஜராஜா' குறித்து விஷால்!

நிச்சயம் இந்த படம் சிரிப்பலையை ஏற்படுத்தும்….. ‘மதகஜராஜா’ குறித்து விஷால்!

-

- Advertisement -

மதகஜராஜா படம் குறித்து நடிகர் விஷால் பேசியுள்ளார்.நிச்சயம் இந்த படம் சிரிப்பலையை ஏற்படுத்தும்..... 'மதகஜராஜா' குறித்து விஷால்!

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர்தான் நடிப்பில் கடைசியாக ரத்னம் திரைப்படம் வெளியானது. அடுத்தது வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி மதகஜராஜா எனும் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஷால், அஞ்சலி, சந்தானம், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படம் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து திரைக்கு வர இருக்கிறது. அதன்படி கடந்த 2013 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த படம் 2025 பொங்கலுக்கு வெளியாக இருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்து நடிகர் விஷால் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

we-r-hiring

அந்த பதிவில், “12 வருடங்கள் கழித்து எனக்கு பிடித்தமான குடும்ப பொழுதுபோக்கு படங்களில் ஒன்றான மதகஜராஜா திரைப்படம் வெளியாக இருக்கிறது. அதிலும் சுந்தர். சி, சந்தானம் காம்போ எனக்கு மிகவும் பிடிக்கும். நிச்சயம் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மதகஜராஜா திரைப்படத்தை ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் நிறுவனம் தயாரிக்க விஜய் ஆண்டனி இந்த படத்தில் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ