spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'மார்க் ஆண்டனி' ரிலீஸ் குறித்து விஷால் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு!

‘மார்க் ஆண்டனி’ ரிலீஸ் குறித்து விஷால் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு!

-

- Advertisement -

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இதில் விஷாலுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, ரித்து வர்மா, அபிநயா, சுனில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டைம் டிராவல் சயின்ஸ் செக்சன் கதைக்களத்தில் உருவான இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார்.

இப்படம் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இன்று வெளியான மார்க்கண்டே திரைப்படத்தின் ரிலீஸ் முன்னிட்டு நடிகர் விஷால் தனது சமூக வலைதள பக்கத்தில், ” கடந்த ஒரு வருடமாக ரத்தம், வியர்வை, வலி, காயம், மரணத்திற்கு அருகிலான அனுபவங்கள் உள்ளிட்டவைகளை கடந்து, நான் மட்டும் இல்லை மார்க் ஆண்டனியின் ஒட்டுமொத்த படக் குழுவும் செப்டம்பர் 15 ஆம் யான இன்று டைம் டிராவல் கேங்ஸ்டர் திரைப்படத்தை உலகம் முழுவதும் தயாராகி விட்டோம். திருப்பதியில் நான் சரண் அடைந்தது தரிசனம் செய்த அந்த கடவுள் மற்றும் 19 வருடங்களாக என்னை ஒரு நடிகனாக ஊக்கப்படுத்தி ஆசீர்வதிப்பவர்கள் இவர்களை நான் எப்போதும் என் இரண்டு கடவுள்களாக நம்புகிறேன். மார்க்கண்டே திரைப்படம் நிச்சயமாக அனைவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்” என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ