மதராஸி படத்தின் அடுத்த அப்டேட் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயனின் 23 வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் மதராஸி. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார். ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடிக்கிறார். மேலும் பிஜு மேனன், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்ட தூத்துக்குடி, சென்னை போன்ற பகுதிகளில் நடைபெற்றது. அதன் பிறகு பிரேக் விடப்பட்டிருந்த இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அதன்படி கிளைமாக்ஸ் போர்ஷன் சம்பந்தமான காட்சிகள் 12 நாட்கள் படமாக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. அதாவது நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தை முடித்த பிறகு மதராஸி படத்தின் மீதி படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இப்படம் 2025 செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த அப்டேட் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இன்னும் சில நாட்களில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.