Homeசெய்திகள்சினிமா'அஜித் 64' படத்தின் ஷூட்டிங் எப்போது?

‘அஜித் 64’ படத்தின் ஷூட்டிங் எப்போது?

-

நடிகர் அஜித் துணிவு படத்திற்கு பிறகு தனது 62வது படமான விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்கிறார். 'அஜித் 64' படத்தின் ஷூட்டிங் எப்போது?அதைத் தொடர்ந்து தனது 63வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித். குட் பேட் அக்லி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. அடுத்த கட்ட படப்பிடிப்புகள் லண்டன் போன்ற பிற பகுதிகளில் நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படமானது 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அதேசமயம் அஜித்தின் 64வது படத்தை சிறுத்தை சிவா இயக்கப் போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வருகிறது. அதன்படி வேதாளம், வீரம், விவேகம் உள்ளிட்ட படங்களுக்கு பிறகு அஜித் , சிறுத்தை சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைய இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்து அதிகமாக இருந்து வருகிறது. 'அஜித் 64' படத்தின் ஷூட்டிங் எப்போது?அதே சமயம் ஏகே 64 படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் அல்லது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அஜித்தின் 64வது படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் அஜித் இந்த படத்திற்காக 2025 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சிறுத்தை சிவாவிற்கு கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் ஆதலால் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸுக்கு பின்னர் ஏகே 64 படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் அஜித் 64 படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ