spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'விடாமுயற்சி' படத்தை பெண்கள் விரும்புவார்கள்.... மகிழ் திருமேனி பேட்டி!

‘விடாமுயற்சி’ படத்தை பெண்கள் விரும்புவார்கள்…. மகிழ் திருமேனி பேட்டி!

-

- Advertisement -

விடாமுயற்சி படம் குறித்து மகிழ் திருமேனி பேட்டி அளித்துள்ளார்.'விடாமுயற்சி' படத்தை பெண்கள் விரும்புவார்கள்.... மகிழ் திருமேனி பேட்டி!

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைத்திருக்கிறார். தடம், தடையறத் தாக்க ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்கியுள்ளார். ஓம் பிரகாஷ் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும் வில்லனாக அர்ஜுனும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் இணைந்து ஆரவ் ரெஜினா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். 'விடாமுயற்சி' படத்தை பெண்கள் விரும்புவார்கள்.... மகிழ் திருமேனி பேட்டி!மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற பிப்ரவரி 6 அன்று திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் மகிழ் திருமேனி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

we-r-hiring

அதில் பேசியதாவது, “அஜித் – திரிஷா ஒரு அருமையான ஜோடி. விடாமுயற்சி படத்தின் கதை என்னுடைய மூலக்கதை இல்லை. என்னுடைய பார்வையில் இந்த படத்தை காதல் படம் என்று தான் சொல்வேன். பிப்ரவரி மாதத்தில் இந்த படம் வெளியாவது ஒரு விதத்தில் பொருத்தமானது தான். மன்னித்து ஏற்றுக் கொள்கின்ற ஒரு காதல். குற்றம் குறைகளை அரவணைத்து ஏற்றுக் கொள்கின்ற ஒரு காதல். அது மாதிரியான காதல் இந்த படத்தில் இருக்கும். இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும். குறிப்பாக பெண்கள் இந்த படத்தை விரும்புவார்கள். அவர்களுடன் இந்த படம் பொருந்திப் போகும்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ