spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஜீவா, மம்மூட்டி நடிப்பில் யாத்ரா 2... டீசர் தேதி அறிவிப்பு...

ஜீவா, மம்மூட்டி நடிப்பில் யாத்ரா 2… டீசர் தேதி அறிவிப்பு…

-

- Advertisement -
ஜீவா மற்றும் மம்மூட்டி நடிப்பில் உருவாகியிருக்கும் யாத்ரா 2 படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் யாத்ரா. மஹி வி ராகவ் இயக்கிய இப்படத்தில் ஒய்.எஸ்.ஆர். கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் மஹி வி ராகவ் இயக்கி வருகிறார்.
இரண்டாம் பாகத்தில் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் மகனும், ஆந்திராவின் தற்போதைய முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வருகிறது. இதில், ஜெகன் மோகன் ரெட்டியாக பிரபல தமிழ் நடிகர் ஜீவா நடிக்கிறார். முந்தைய பாகத்தில் ஒய்.எஸ்.ஆர் கதாபாத்திரத்தில் நடித்த மம்மூட்டி இந்த பாகத்திலும் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ம் தேதி திரையரங்குகளில் வௌியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே படத்தின் முதல் தோற்றம் அண்மையில் வௌியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, வரும் ஜனவரி 5-ம் தேதி இப்படத்தின் டீசர் வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

MUST READ