யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள போட் படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் யோகி பாபு தற்போது பல படங்காலில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் வானவன், மிஸ் மேகி, ஜோரா கைய தட்டுங்க போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ள யோகி பாபு சட்னி சாம்பார் என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார். இதற்கிடையில் இவர், இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் போட் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் யோகி பாபுவுடன் இணைந்து கௌரி கிஷன், எம் எஸ் பாஸ்கர், சின்னி ஜெயந்த், மதுமிதா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சர்வைவல் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மகேஷ் மாணிக்கம் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.
Step into a world where every shot tells a story.@iyogibabu will start sailing the #Boat
Trailer on 26th July @5pm
Stay Tuned….Watch the interesting political entertainer of Director @chimbu_deven’s #Boat in theatres from Aug 2nd !!
Produced by @maaliandmaanvi & @cde_off… pic.twitter.com/jRSzZtCsKh
— Maali&Manvi_Movie Makers (@Maaliandmaanvi) July 24, 2024
ஏற்கனவே இந்த படத்தின் டீசரும் அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகின்றன. அதே சமயம் இந்த படமானது வருகின்ற ஆகஸ்ட் 2ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை (ஜூலை 26) மாலை 5 மணி அளவில் வெளியாகும் என பட குழுவினர் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.