spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாயுவன் இசையிலும், அனிருத் குரலிலும் வெளியான புதிய பாடல்!

யுவன் இசையிலும், அனிருத் குரலிலும் வெளியான புதிய பாடல்!

-

- Advertisement -

யுவன் சங்கர் ராஜா இசையில் அனிருத் பாடிய பாடல் ஒன்று வெளியாகி உள்ளது.

சரத்குமார் மற்றும் அமிதாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பரம்பொருள். இந்த படத்தை அரவிந்த் ராஜ் எழுதி இயக்கியுள்ளார். எஸ் பாண்டி குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கவி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் படம் உருவாகியுள்ளது.
கடத்தல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியுள்ள படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

we-r-hiring

இந்நிலையில் இப்படத்தினை வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்படவினர் திட்டமிட்டுள்ளதாக சில நாட்களுக்கு முன்பாக செய்திகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் அடியாத்தி எனும் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜாவும் அனிருத்தும் இணைந்து பாடியுள்ளனர். யுவன் இசையின் அனிருத் பாடியுள்ளது இதுவே முதல் முறையாகும். தற்போது பாடல் வைரலாகி வருகிறது. இந்தப் பாடலை ஏ ஆர் ரகுமான் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ