spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்சிறுமியை வைத்து பாலியல் தொழில்- 8 பேர் கைது

சிறுமியை வைத்து பாலியல் தொழில்- 8 பேர் கைது

-

- Advertisement -

கரூரில் சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்த 3 பெண் புரோக்கர்கள் மற்றும் ஐந்து இளைஞர்கள் உள்ளிட்ட 8 பேர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

arrest

we-r-hiring

கரூர் தொழிற்பேட்டை பகுதியில் சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக பொதுமக்கள் மூலமாக குழந்தைகள் நல அலுவலகத்திற்கு புகார் சென்றுள்ளது. இந்த புகார் குறித்து குழந்தைகள் நல அலுவலர் கனகவல்லி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தார்.

அந்த தகவலின் பெயரில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பெயரில், தனிப்படை குழு அமைக்கப்பட்டு சம்பவ இடத்தில் ரகசிய விசாரணையை மேற்கொண்டனர். இதில் மூன்று பெண் புரோக்கர், ஐந்து இளைஞர்கள் உட்பட எட்டு பேரை கரூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து இன்று மதியம் 12 மணி முதல் போலீசார் விசாரணையை தொடங்கினர். மேலும், கரூர் காவல் நிலையத்திற்கு வந்த எஸ்.பி சுந்தரவதனம் விசாரணையை தீவிர படுத்த உத்தரவிட்டு சென்றார்.

அதனை தொடர்ந்து சாந்தி (42), மேகலா (42), மாயா (45) ஆகிய மூன்று பெண் புரோக்கர்கள், கார்த்தி (28), கார்த்திகேயன்(27), சந்தோஷ் (30), தன்னாசி என்ற சமுத்திரபாண்டி (27), கௌதம் (30) உள்ளிட்ட 8 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்த குற்றத்திற்காக போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த விசாரணையின் முடிவில் கடந்த ஆறு மாத காலமாக சிறுமியை வைத்து பாலியல் தொழில் நடைபெற்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 8 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்ற காவலுக்கு அழைத்துச் சென்றனர்.

MUST READ