நாமக்கல் அருகே தனியார் பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து 12 ம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.போலீசார் தீவிர விசாரணை!
நாமக்கல் அருகே தனியார் பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து 12 ம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. நேற்று மாலை விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து மாணவன் கீழே குதித்து உள்ளான்.
தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. விடுதி வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை…
கரூர் மாவட்டம் வடிவேல் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன் அஜய் (17) நாமக்கல் அடுத்த கூலிப்பட்டி பகுதியில் உள்ள சைத்தான்யா என்ற தனியார் பள்ளியில் +2 படித்து வந்தார்.
பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த இவர் நேற்று மாலை வழக்கம்போல வகுப்பு முடிந்ததும் விடுதிக்கு சென்று உள்ளார். மாலை 6 மணியளவில் விடுதியின் 2 வது மாடிக்கு சென்று அங்கிருந்து திடீரென கீழே குதித்துள்ளார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மாணவன் அஜய் உயிரிழந்துள்ளான். இது தொடர்பாக நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.