Homeசெய்திகள்க்ரைம்டிஐஜி பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி மோசடி - இருவர் கைது

டிஐஜி பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி மோசடி – இருவர் கைது

-

ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட அரசுத் துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தி போலீஸ் சமூக வலைதள கணக்குகளை தொடங்கி மோசடி செய்யும் கும்பல் பிடிபடாமல் சிக்கி வந்த நிலையில் முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது.

டிஐஜி பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி மோசடி - இருவர் கைதுமுதல்வரின் பாதுகாப்பு பிரிவு அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி மோசடி செய்த கும்பலைச் சென்னை சைபர் கிரைம் தனிப்படை போலீசார் ராஜஸ்தானில் வைத்து கைது செய்து சென்னை கொண்டு வந்தனர்.

ஐபிஎஸ் அதிகாரிகளை குறிவைத்து அவர்களது பெயரை பயன்படுத்தி மோசடி செய்து வந்த கும்பலில் உள்ள முக்கிய குற்றவாளிகள தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் பாதுகாப்பு பிரிவு அதிகாரியாக இருப்பவர் டிஐஜி திருநாவுக்கரசு. இவரது பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தி போலியான முகநூல் கணக்கை தொடங்கிய சைபர் மோசடி கும்பல் அவரது நட்பு வட்டத்தில் இருந்தவர்களிடம் பணம் பறித்தனர்.

எம்.ஆர். விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கு – சிபிசிஐடி விசாரணை

இது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் ஐபிஎஸ் அதிகாரி திருநாவுக்கரசு சென்னை சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார். அந்த மோசடி கும்பல் ஐபிஎஸ் அதிகாரியின் நட்பு பட்டியலில் இருந்த பலரிடமும், அதிகாரி திருநாவுக்கரசின் நண்பர் சிஆர்பிஎஃப் பணியாற்றி இருப்பதாகவும் அவர் சென்னையில் இருந்து இடமாற்றல் ஆவதால் அவர் வீட்டில் பயன்படுத்திய விலை உயர்ந்த பர்னிச்சர் பொருட்களை குறைந்த விலையில் தருவதாக கூறியும் மோசடி செய்துள்ளனர்.

கடந்த ஆறு மாத காலமாக பல்வேறு காலகட்டங்களில் 2 லட்சத்திற்கும் மேலே ஐபிஎஸ் அதிகாரி திருநாவுக்கரசின் நட்பு பட்டியலில் இருந்தவர்களிடம் இந்த மோசடி கும்பல் பணம் பறித்துள்ளது.

இதுபோன்று தமிழக காவல்துறையில் உள்ள பல ஐபிஎஸ் அதிகாரிகள் பெயரையும், முகப்பு படத்தையும் பயன்படுத்தி சைபர் மோசடி கும்பல் தொடர்ந்து பண மோசடி செய்து வந்த நிலையில், சென்னை சைபர் கிரைம் போலீசார் தனிப்படை ஒன்றை அமைத்து மோசடி செய்த கும்பல் இயங்கிய ஐபி முகவரியை வைத்து ராஜஸ்தான் சென்றனர்.

பணம் பரிவர்த்தனை செய்யப்பட்ட ஜி-பே எண்களை வைத்து விசாரணை மேற்கொண்ட சைபர் கிரைம் போலீசார் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் எனும் பகுதியில் மோசடி கும்பல் மறைந்திருப்பதை கண்டுபிடித்தனர்.

டிஐஜி பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி மோசடி - இருவர் கைதுராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரைச் சேர்ந்த ஹனிஃப்கான், வாஷித் கான் என்ற இருவரை கைது செய்த சென்னை சைபர் கிரைம் போலீசார் இருவரையும் சென்னை கொண்டு வந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

விசாரணையில் இந்த கும்பல் ஐபிஎஸ் அதிகாரிகளை மட்டும் குறிவைத்து போலி முகநூல் கணக்கு தொடங்கி பல லட்சம் பணம் பறித்துள்ள நிலையில், கைது செய்யப்பட்ட இருவரையும் மீண்டும் காவலில் எடுத்து பின்னணியில் உள்ள கும்பலை கைது செய்ய சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட அரசுத் துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தி போலீஸ் சமூக வலைதள கணக்குகளை தொடங்கி மோசடி செய்யும் கும்பல் பிடிபடாமல் சிக்கி வந்த நிலையில் முக்கிய குற்றவாளிகள் இருவர் ராஜஸ்தானில் வைத்து கைது செய்தனர்.

MUST READ