நாகை அருகே 5-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தென்மருதூரை சேர்ந்தவர் தேவதாஸ்(38). ஆந்தகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் அங்குள்ள 5-ம் வகுப்பு பயிலும் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணையில் ஆசிரியர் மீது கூறப்பட்ட புகாரில் உண்மைஇருப்பது தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து அவரை சஸ்பென்ட் செய்து மாவட்ட கல்வி அலுவலர்கார்த்திகேயன் உத்தரவிட்டார். இந்த நிலையில் இது குறித்து வட்டார கல்வி அலுவலர் மணிகண்டன் காவல்நிலையம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். புகாரை பெற்ற நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஆசிரியரை தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த ஆசிரியர் தேவதாஸ் கீழ்வேளூர் பேருந்து நிலையம் அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல்கிடைத்தது. அதனை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் தலைமறைவாக இருந்த அரசுப்பள்ளி ஆசிரியர் தேவதாசை சுற்றிவளைத்து கைது செய்தனர்.