Homeசெய்திகள்க்ரைம்முதலிரவு முடிந்ததும் தப்பி ஓடுவது வழக்கம்! 50 பெண்களை திருமணம் செய்த கல்யாண மன்னன்

முதலிரவு முடிந்ததும் தப்பி ஓடுவது வழக்கம்! 50 பெண்களை திருமணம் செய்த கல்யாண மன்னன்

-

முதலிரவு முடிந்ததும் தப்பி ஓடுவது வழக்கம்! 50 பெண்களை திருமணம் செய்த கல்யாண மன்னன்
முதலிரவு

ஒரு திருமணம் செய்யவே பல ஆண்டுகளாக வரன் தேடி அலைந்து வருவோர் இருக்க, கடந்த 20 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து பணம் நகைகளை வாரி சுருட்டிக் கொண்டு ஓடி இருக்கிறார் கல்யாணம் மன்னன் தபேஷ் குமார் பட்டாச்சார்யா. ஒவ்வொரு
பெண்ணிடமும் முதலிரவு முடிந்ததும் பணம், நகைகளை சுருட்டிக் கொண்டு தப்பி ஓடுவதை இந்த கல்யாண மன்னன் வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.

தபேஸ் குமார் பட்டாச்சாரியாவுக்கு தற்போது 55 வயதாகிறது. இவர்தான் அந்த கல்யாணம் மன்னன். ஜார்கண்ட் மாநிலத்தில் ஜாம்ஷெட்பூர் பகுதியைச் சேர்ந்தவர். கடந்த 1992 ஆம் ஆண்டில் மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து இருக்கிறார். இரண்டு பெண் குழந்தைகள் பிறந்திருக்கிறது. திருமணம் ஆகி 8 ஆண்டுகள் கழித்து மனைவியையும் மகள்களையும் விட்டு பிரிந்து தலைமறைவாகி இருக்கிறார் தபேஷ்குமார்.

முதலிரவு முடிந்ததும் தப்பி ஓடுவது வழக்கம்! 50 பெண்களை திருமணம் செய்த கல்யாண மன்னன்
கல்யாண மன்னன்

கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் தங்கி இருந்து வேலை வாய்ப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். வேலை தேடி வரும் ஆண்களையும் பெண்களையும் ஏமாற்றி வந்திருக்கிறார் . ஒரு கட்டத்திற்கு மேல் ஏமாற்ற முடியாத நிலை வந்த போது, ஷாடி மேட்ரிமோனி இணையதளத்தின் மூலமாக
மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

விவகாரத்து பெற்ற பெண்கள் , கணவரை இழந்த பெண்கள், திருமணம் ஆன பெண்களை குறி வைத்து அவர்களை தன்
வலையில் வீழ்த்தி வந்திருக்கிறார் தபேஷ் குமார். இப்படி 20 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்திருக்கிறார்.

திருமணத்திற்கு பின்னர் முதல் இரவு நடந்ததும் பெண்களிடம் உள்ள பணம், நகைகளை கொள்ளை அடித்துக் கொண்டு தலைமறைவாகி விடுவதை வழக்கமாக கொண்டு வந்திருக்கிறார் தபேஷ்குமார். கர்நாடகம், மணிப்பூர், உத்தரப்பிரதேசம் ,ஒடிசா, மேற்கு வங்கம், மராட்டிய மாநிலம், திரிபுரா என்று பல்வேறு
மாநிலங்களில் 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி வந்திருக்கிறார். வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள் , வணிகர்கள், பொறியாளர்கள் என்று 50 பெண்களில் பெரும்பான்மையானோர் படித்த பெண்களே இவரிடம் ஏமாந்து போயிருக்கிறார்கள்.

சில இடங்களில் சில பெண்களால் புகார் அளிக்கப்பட்டு அந்த புகாரில் சிக்கி சிறை தண்டனையும் அனுபவித்து வந்திருக்கிறார் . சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் மீண்டும் தனது மோசடி வேலையை தொடங்கி வந்திருக்கிறார். பல பெண்கள் அளித்த புகாரின் பேரில் ஹரியானா போலீசார் இந்த நபரை
தீவிரமாக தேடி வந்த நிலையில்தான் ஒடிசாவில் தலைமறைவாக இருந்தது தெரிய வந்திருக்கிறது. குருகிராம் பகுதியில் இருந்த அவரை அரியானா போலீசார்
கைது செய்துள்ளனர்.

MUST READ