spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்குழந்தையை விற்று நாடகம்! நீதிபதியை கலங்கடித்த தாய்!! பகீர் பின்னணி

குழந்தையை விற்று நாடகம்! நீதிபதியை கலங்கடித்த தாய்!! பகீர் பின்னணி

-

- Advertisement -

திருச்சி அருகே முறையற்ற உறவால் பிறந்த குழந்தையை விற்ற தாய் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

we-r-hiring

திருச்சி மாவட்டம், லால்குடி, அரியூர் பகுதியை சேர்ந்த அய்யாசாமி மகன் வழக்கறிஞர் பிரபு(வயது 42). இவரது மனைவி மெர்சி. இருவரும் வழக்கறிஞர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் வழக்கறிஞர் பிரபுக்கும், மெர்சிக்கும் இடையே கருத்து வேறுபாடுக்கான காரணமாக பிரிந்து விடுகின்றனர். இதனால் பிரபு தகாத தொடர்பு மூலம் சண்முகவள்ளியை திருமணம் செய்யாமல் குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.

இதனிடையே லால்குடி அடுத்த அன்பில் மங்கமாள்புரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகள் ஜானகி (வயது 32) வழக்கறிஞர் பிரபுவின் அலுவலகத்தில் பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் ஜானகி பல ஆண்களிடம் தகாத உறவு வைத்துக் கொண்டதால் கர்ப்பம் தரித்துள்ளார். மேலும் கடந்த ஜூலை மாதம் ஜானகி 7 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்ததையடுத்து ஜானகி என்ன செய்வது என்று தெரியாமல் வழக்கறிஞர் பிரபுவிடம் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி இதற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் பிரபு, ஜானகிடம் குழந்தை பிறக்கட்டும் பார்த்துக் கொள்வோம் என்று கூறியுள்ளார். ஆனால் பிரபு மற்றும் அவரது கள்ளமனைவி சண்முகவள்ளி இருவரும் சேர்ந்து ஆண் குழந்தை பிறந்தால் 5 லட்சம் ரூபாய்க்கும், பெண் குழந்தை பிறந்தால் 3.5 லட்சம் ரூபாய்க்கும் விற்பதற்காக ஜானகிக்கு தெரியாமல் திட்டம் தீட்டியுள்ளனர். நிறைமாத கர்ப்பிணியான ஜானகி செப்டம்பர் மாதம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் தனியார் மருத்துவமனையில் கணவர் யார் என்பது தெரியாததால் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். அங்கு ஜானகிக்கு செப்டம்பர் 17ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது.

கணவர் யார் என மருத்துவர்கள் கேட்டுள்ளனர். அதற்கு பதில் தராததால் மருத்துவமனை நிர்வாகம் சைல்ட் லைனுக்கு தொடர்பு கொண்டு ஜானகி குழந்தை பிறந்தது குறித்து தெரிவித்தனர். இதை தெரிந்து கொண்ட வழக்கறிஞர் பிரபு சண்முகவள்ளி இருவரும் சேர்ந்து ஜானகி மற்றும் குழந்தையை தூக்கிக் கொண்டு அங்கிருந்து தலைமறைவாகினார். பிறந்து 10 நாட்களான குழந்தையை வழக்கறிஞர் பிரபு மற்றும் அவரது கள்ள மனைவி சண்முகவள்ளி இருவரும் சேர்ந்து ஜானகி மற்றும் பிறந்த குழந்தையை கூட்டிச் சென்று தலைமறைவாக இருந்தனர்.

உங்கள் குழந்தை எடை குறைவாக பிறந்துள்ளதா? கவலையே வேண்டாம்… இதை ஃபாலோ  பண்ணுங்க..!

இந்நிலையில் பிறந்த 10 நாட்களில் குழந்தையை பிரபு, சண்முகவள்ளி இருவரும் சேர்ந்து குழந்தையை விற்பதற்காக காரில் அழைத்துக் கொண்டு நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள உத்தமர் கோவில் ரயில்வே மேம்பாலம் அருகில் கடந்த 23ஆம் தேதி சென்றுள்ளனர். அங்கு குழந்தையை ஒரு லட்ச ரூபாய்க்கு விற்றுவிடலாம் என ஜானகிடம் கூறி அதற்கு ஜானகியும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து குழந்தையை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து 80 ஆயிரம் ரூபாய் ஜானகியிடம் கொடுத்துவிட்டு இருபதாயிரம் ரூபாய் பிரபு மற்றும் சண்முகவள்ளி எடுத்துக் கொண்டனர்.

ஆனால் பிரபு பெண் குழந்தையை பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார் என்பது இரண்டு தினங்களுக்கு பின்பு ஜானகிக்கு தெரிய வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜானகி இது குறித்து லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தான் குழந்தையை கடத்தி சென்று விட்டதாக புகார் தெரிவித்துள்ளார். புகாரின் மீது நடவடிக்கை இல்லாததால் கடந்த அக்டோபர் மாதம் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் தன் குழந்தையை காணவில்லை எனவும் இதற்கு காரணம் வழக்கறிஞர் பிரபு மற்றும் சண்முகவள்ளி தான் என்றும் புகார் அளித்துள்ளார். புகாரின் மீது நடவடிக்கை இல்லாததால் ஜானகி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு பதிவிடுகிறார். அதில் போலீசார் என் குழந்தையை கண்டுபிடிக்காமல் தகுந்த நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர். இதற்கு காரணம் பிரபு மற்றும் சண்முகவள்ளி தான் என்றும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி அறிவுறுத்தலின்படி, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் தகவல் தெரிவிக்கப்பட்டு முழு விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் உத்தரவின் படி மூன்று ஆய்வாளர்கள் தலைமையில் 15 பேர் கொண்டு தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி ஜானகி, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தனக்கும் பிரபு மற்றும் சண்முகவள்ளிக்கு எந்த தொடர்பும் இல்லை. குழந்தை என்னிடம் தான் உள்ளது என்று நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்ட நீதிபதி ஜானகியின் பதில் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதால் நீதிபதி, குழந்தையை காட்டுங்கள் என்று கூறியுள்ளனர். ஆனால் ஜானகி குழந்தையை காட்டாததால், மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜானகி மீது உரிய விசாரணை நடத்தி குழந்தையை கண்டுபிடிங்கள் என திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமாருக்கு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதனை அடுத்து வழக்கு தொடுத்த ஜானகி மீது வழக்குப்பதிவு செய்து முழு விசாரணை நடத்த வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில் தனிப்படை போலீசார் ஜானகிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

உன்னத பணியில் உயர்நீதிமன்ற மதுரை கிளை | Dinamalar Tamil News

7 மாதம் கர்ப்பம் தரித்த ஜானகி பிரபுவை தொடர்பு கொண்டு கேட்டபோது பிரபு மற்றும் அவரது கள்ள மனைவி சண்முகவள்ளி இருவரும் சேர்ந்து ஆண் குழந்தை பிறந்தால் 5 லட்சம் ரூபாய்க்கும் பெண் குழந்தை என்றால் ரூ.3.5 லட்சத்துக்கும் விற்று விடலாம் என ஜானகிக்கு தெரியாமல் திட்டம் தீட்டியுள்ளனர். அதே போன்று ஜானகிக்கு ஒன்பது மாதத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை மற்றும் தாய் இருவரையும் பிரபு மற்றும் சண்முகவள்ளி காரில் அழைத்துக் கொண்டு 3.5 லட்ச ரூபாய்க்கு விற்றுவிட்டு ஜானகியிடம் ஒரு லட்ச ரூபாய்க்கு குழந்தையை கொடுத்துள்ளோம் என்றும் நீ 80 ஆயிரம் ரூபாய் வைத்துக் கொள் நாங்கள் 20 ஆயிரம் ரூபாய் வைத்துக் கொள்கிறோம் என்று கூறியதால் ஜானகியும் பணத்தை வாங்கிக் கொண்டு சென்றார் என்பதும் தெரியவந்தது.

அதன்பின்னர் இரண்டு நாட்கள் கழித்து ஜானகி பல லட்ச ரூபாய்க்கு குழந்தையை விற்பனை செய்தது தெரியவந்ததை அடுத்து வழக்கறிஞர் பிரபு மற்றும் சண்முகவள்ளியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் பணம் அவ்வளவு தான் என கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஜானகி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து உள்ளார். வழக்கு கொடுத்துள்ளதை எடுத்து வழக்கறிஞர் பிரபு மற்றும் சண்முகவள்ளி மீண்டும் ஜானகி பணத்தை கொடுத்துள்ளனர். இதனால் ஜானகி நீதிமன்றத்தில் குழந்தை என்னிடம் தான் உள்ளது என நீதிபதியிடம் கூறியுள்ளார். மேலும் போலீசார் விசாரணையில் ஜானகிக்கு பிறந்த குழந்தையை வழக்கறிஞர் பிரபு மற்றும் சண்முகவள்ளி திருச்சி மாநகர் அரியமங்கலம் அடுத்து காட்டூர் பகுதியை சேர்ந்த கவிதா என்பவர் மூலமாக குழந்தையை விற்றதாக பிரபு வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

கவிதா அந்த குழந்தையை குழந்தை இல்லாத தம்பதியினருக்கு விற்பனை செய்தாரா? அல்லது நரபலி கொடுப்பதற்காக வாங்கினாரா என்பது முழு விசாரணையில் தெரியவரும். இந்த நிலையில் லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் ஜானகி மீது 8 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். மேலும் வழக்கறிஞர் பிரபு மற்றும் ஜானகியை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் குழந்தையை விற்ற நபரின் செல்ஃபோன் டவரை வைத்து எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்தும் தனிப்படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

MUST READ