spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்பீர் பாட்டிலால் காவலர் மண்டை உடைப்பு - புத்தாண்டில் இளைஞர்கள் வெறிச்செயல்

பீர் பாட்டிலால் காவலர் மண்டை உடைப்பு – புத்தாண்டில் இளைஞர்கள் வெறிச்செயல்

-

- Advertisement -

புதுச்சேரி அடுத்த லாஸ்பேட்டையில் ரோந்து சென்ற காவலர் மீது கொடூர தாக்குதல் நடத்திய சம்பவத்தில், அரசு ஊழியர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

police
புதுச்சேரி அடுத்த லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணி புரிந்து வருபவர் சுந்தரராமன். இவர் மடுவுபேட் சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு 6 பேர் கொண்ட கும்பல் மது குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டது. இதையடுத்து அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி சுந்தரராமன் கூறினார். ஆனால் அந்த கும்பல் அங்கிருந்து செல்ல மறுத்து தகராறு செய்ததுடன், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து திடீரென பீர்பாட்டிலால் சுந்தரராமனை சரமாரியாக தாக்கியது. இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் வெளியேறியது. உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

we-r-hiring

ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை, லாஸ்பேட்டை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு 18 தையல் போடப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த மவுடுபேட் பகுதியை சேர்ந்த அரசு ஊழியர் அண்ணாமலை, தீனா உள்பட 6 பேர் மீது, லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

போலீசார் தேடுதலில் தீனா சிக்கினார். முக்கிய குற்றவாளியான அண்ணாமலை உள்பட 5 பேரை தேடி வருகின்றனர். இதற்கிடையில் பாஜக இளைஞரணி நிர்வாகிகள் , அண்ணாமலையை கைது செய்ய வேண்டாம். அவரை தேடுவதை நிறுத்த வேண்டும் என்று லாஸ்பேட்டை போலீசாரிடம் சமாதானம் பேச்சுவார்த்தைக்கு வந்தனர். அடிபட்டவர் போலீஸ்காரர். இதில் பேச்சுவார்த்தைக்கு இடம் இல்லை. இது தொடர்பாக யார் வந்தாலும், அவர்களையும் குற்றவாளியாக சேர்ப்போம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து பாஜக இளைஞரணி நிர்வாகிகள், காவல்நிலையத்தில் இருந்து வெளியேறினர்.

போலீசாரால் தேடப்பட்டு வரும் அண்ணாமலையின் அக்கா,தங்கை மற்றும் மைத்துனர் காவலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ