Homeசெய்திகள்க்ரைம்Breaking News: பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டல்: 23 ஆசிரியர்கள் டிஸ்மிஸ்..!

Breaking News: பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டல்: 23 ஆசிரியர்கள் டிஸ்மிஸ்..!

-

- Advertisement -

போக்ஸ்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குற்றச்சாட்டு உறுதியான நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் 23 பேர் டிஸ்மி செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளி கல்வித்துறையில் நிலுவையில் உள்ள 46 போக்சோ வழக்குகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இந்நிலையில் அந்த வழக்குகளில் தற்போது 23 ஆசிரியர்களின் குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் 23 பேரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் மீதான இந்த போக்சோ வழக்குகளில் 23 வழக்குகள் இறுதி விசாரணை முடிந்திருக்கும் நிலையில் அந்த 23 ஆசிரியர்களும் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டதன் காரணமாக அவர்களை பணியில் இருந்து நீக்கி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.13 வயது பள்ளி சிறுமி பலாத்காரம்: முன்னாள் நாதக நிர்வாகி உட்பட 8 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு

குறிப்பாக கடந்த மாதம் பள்ளிக்கல்வித்துறையில் இருக்கக்கூடிய அரசு ஆசிரியர்கள் மீது போக்சோ வழக்குகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் இதுவரைக்கும் தமிழகத்தில் 200 க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் பதிவாகி இருக்கிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். அவர்களது கல்வி சான்றிதழ் ரத்து செய்யப்படும்.

"தமிழகத்தில் பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை"- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டம்!

ஆசிரியர்கள் மீது கடுமையான் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாணவ- மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக இந்த விதிகளில் மாற்றம் செய்து வழக்குகளில் கடுமையான தண்டனை வழங்கப்படும். இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விதிமுறைகளின் மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 23 வழக்குகளில் ஆசிரியர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு இருப்பதால் அவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

MUST READ