Homeசெய்திகள்க்ரைம்தாம்பரம்: கஸ்டம்ஸ் வேலைக்கு ஆள் எடுப்பதாக பஸ்ஸில் நாடகமாடி ரூ.65 ஆயிரம் வசூலிக்க முயன்ற 73...

தாம்பரம்: கஸ்டம்ஸ் வேலைக்கு ஆள் எடுப்பதாக பஸ்ஸில் நாடகமாடி ரூ.65 ஆயிரம் வசூலிக்க முயன்ற 73 வயது முதியவர் கைது!

-

- Advertisement -

சென்னை மாநகரப் பேருந்தில் செல்போனில் உரக்கப் பேசி நாடகமாடி, விமான நிலைய சுங்கத்துறை (Customs) அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பட்டதாரி இளைஞர்களிடம் பணம் பறிக்க முயன்ற 73 வயது முதியவரைப் பொதுமக்களே விரட்டிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (48). இவரது மகள் பொறியியல் பட்டம் பெற்றுவிட்டு வேலை தேடி வந்துள்ளார்.தாம்பரம்: கஸ்டம்ஸ் வேலைக்கு ஆள் எடுப்பதாக பஸ்ஸில் நாடகமாடி ரூ.65 ஆயிரம் வசூலிக்க முயன்ற 73 வயது முதியவர் கைது!

பேருந்தில் அரங்கேறிய நாடகம்: கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமமூர்த்தியின் உறவினரான ஹரி என்பவர் சென்னை மாநகரப் பேருந்து ஒன்றில் பயணம் செய்துள்ளார். அப்போது அதே பேருந்தில் பயணம் செய்த முதியவர் ஒருவர், தனது செல்போனில் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்தில் ‘கிளர்க்’ பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாகவும், தெரிந்தவர்களுக்கு வேலை வாங்கித் தருவதாகவும் சத்தமாகப் பேசியுள்ளார்.

we-r-hiring

பக்கத்தில் அமர்ந்திருந்த ஹரியின் காதில் இது விழவே, தனது உறவினர் வீட்டுப் பெண்ணுக்கு வேலை வேண்டும் எனக் கேட்டு அந்த முதியவரிடம் செல்போன் எண்களைப் பெற்றுள்ளார்.

விண்ணப்பக் கட்டணம் முதல் லஞ்சம் வரை:
கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி, ஹரி மூலமாக ராமமூர்த்தியைத் தொடர்பு கொண்ட அந்த முதியவர், “இன்றுதான் கிளார்க் வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்” எனக் கூறி அவர்களை சென்னை விமான நிலைய வளாகத்திற்கு வரவழைத்துள்ளார். அங்கு வைத்து வேலை விண்ணப்பக் கட்டணமாக ரூ.2,500 மற்றும் இதர செலவுகளுக்கு ரூ.500 என மொத்தம் ரூ.3,000-ஐப் பெற்றுக் கொண்டு, பணி ஆணை வழங்கியவுடன் பார்த்துக்கொள்ளலாம் எனக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 11ஆம் தேதி மீண்டும் வேறு ஒரு செல்போன் எண்ணிலிருந்து ராமமூர்த்தியைத் தொடர்பு கொண்ட அந்த முதியவர், ஆதார் நகல் உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் அதிகாரிகளுக்குத் தரவேண்டிய ரூ.65 ஆயிரம் பணத்துடன் சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையப் பகுதிக்கு வருமாறு கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார்.

உஷாரான தம்பதி – பிடிபட்ட முதியவர்:
முதியவர் கூறியபடி ராமமூர்த்தியும் அவரது மனைவியும் பணத்துடன் விமான நிலைய மெட்ரோ பகுதிக்கு வந்து அவரைத் தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது போனை எடுக்காத அந்த முதியவர், மற்றொரு எண்ணிலிருந்து பேசி “கஸ்டம்ஸ் பணியில் செல்போன் பயன்படுத்த அனுமதி இல்லை, லாக்கரில் வைத்துள்ளேன்; காத்திருங்கள்” எனக் கூறியுள்ளார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு வேறு ஒரு ஆவணம் தொடர்பாகத் தகவல் கேட்க, கடைசியாகப் பேசிய எண்ணிற்கு ராமமூர்த்தி தொடர்பு கொண்டபோது, அந்த செல்போனை எடுத்த மற்றொரு நபர், “தன்னிடம் முதியவர் ஒருவர் உதவி கேட்டு வாங்கிப் பேசினார்” என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ராமமூர்த்தியும் அவரது மனைவியும், “பணம் போனாலும் பரவாயில்லை, இந்த நபர் வேறு யாரையும் ஏமாற்றக் கூடாது” என்று உஷாராகக் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த அந்த முதியவர், “பணி இடைவேளையில் வந்துள்ளேன்” எனக் கூறி ரூ.65 ஆயிரத்தைக் கேட்டுள்ளார். தம்பதியினர் அவரை உற்றுநோக்கவே, சுதாரித்துக்கொண்ட முதியவர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். உடனே ராமமூர்த்தி அவரைத் துரத்திப் பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அங்கிருந்த சென்னை விமான நிலைய காவல் நிலையப் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தீவிர விசாரணை மற்றும் சிறை அடைப்பு:
போலீசார் நடத்திய விசாரணையில், சிக்கிய முதியவர் ஆந்திர மாநிலம் ரேனிகுண்டா பகுதியைச் சேர்ந்த சங்கரய்யா (73) என்பதும், சென்னை பரங்கிமலை மற்றும் ஆலந்தூர் பகுதிகளில் தங்கி இதுபோன்று வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் குற்றவியல் நடுவர் முன்பு ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், சங்கரய்யா இதுபோன்று வேறு யாரிடமாவது மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து அவரை காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் சமீபத்தில் கஸ்டம்ஸ் அதிகாரி போல் நடித்து நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது கஸ்டம்சில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 73 வயது முதியவர் சிக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் பதற்றம்: 11 நாட்களில் கல்லூரி மாணவர், பெண் உட்பட 4 பேர் படுகொலை! – பாப்பநாயக்கன்பாளையத்தில் வீடு புகுந்து பெண் கொடூரக் கொலை

MUST READ