Homeசெய்திகள்க்ரைம்பெரியபாளையம் அருகே பரபரப்பு: அஞ்சாத்தம்மன் கோயில் பூட்டை உடைத்துத் தாலி, உண்டியல் பணம் திருட்டு!

பெரியபாளையம் அருகே பரபரப்பு: அஞ்சாத்தம்மன் கோயில் பூட்டை உடைத்துத் தாலி, உண்டியல் பணம் திருட்டு!

-

- Advertisement -

கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து பெரியபாளையம் போலீசார் தீவிர விசாரணை!பெரியபாளையம் அருகே பரபரப்பு: அஞ்சாத்தம்மன் கோயில் பூட்டை உடைத்துத் தாலி, உண்டியல் பணம் திருட்டு!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள கொசவன்பேட்டை பகுதியில் பழமை வாய்ந்த அருள்மிகு அஞ்சாத்தம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்நிலையில், இக்கோயிலில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள், பூட்டை உடைத்து அம்மன் தாலி மற்றும் உண்டியல் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

நள்ளிரவில் நடந்த துணிகரச் சம்பவம்
நேற்றிரவு பூஜைகள் முடிந்ததும் அர்ச்சகர் வழக்கம்போல் கோயிலைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். இன்று காலை மீண்டும் பூஜைகள் செய்வதற்காக அவர் கோயிலுக்கு வந்தபோது, பிரதான வாசலின் பூட்டு உடைக்கப்பட்டுத் திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே கோயிலின் உள்ளே சென்று பார்த்தபோது, கருவறையில் இருந்த அஞ்சாத்தம்மன் திருமேனியின் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த தங்கத் தாலி மற்றும் கோயிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த ரொக்கப் பணம் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

போலீசார் தீவிர விசாரணை
இத்திருட்டுச் சம்பவம் குறித்து ஆலய நிர்வாகிகள் உடனடியாகப் பெரியபாளையம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப் பகுதியில் உள்ள முக்கியச் சாலைகள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளைச் ஆய்வு செய்து, கோயிலில் துணிகரத் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசித் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரியில் பெரும் அதிர்ச்சி: நகைத் திருடனைப் பிடித்துக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை! காவல்துறையின் அலட்சியத்தால் குடும்பத்துடன் தற்கொலை முடிவெடுத்த ஏழைப் பெண் கண்ணீர் கதறல்

MUST READ