spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் - டிடிவி தினகரன்

தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் – டிடிவி தினகரன்

-

- Advertisement -

தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்களை டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: “தீப ஒளித்திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த திபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டு மக்களை பெருந்துன்பத்திற்குள்ளாக்கிய நரகாசூரன் எனும் அரக்கனை திருமால் அழித்த இந்த தினமே தீபாவளிப் பண்டிகையாக அனைவராலும் கொண்டாடப்படுகிறது. அதர்மம் என்றைக்கும் நிலைத்ததில்லை என்பதை உணர்த்தி, தீமைகள் எனும் இருளை விலக்கி, நன்மை எனும் வெளிச்சத்தை பரப்பும் இத்திருநாளில் அனைவரிடத்திலும் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிறைந்து அன்பு தழைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். சாதி, மத பாகுபாடுகளை கடந்து ஒற்றுமை உணர்வை மக்கள் மனதில் ஏற்றும் ஒளியாகவும் இந்த தீபாவளி திருநாள் அமைய, மீண்டும் அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்களை ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் - டிடிவி தினகரன்

we-r-hiring

 

MUST READ