Homeசெய்திகள்மாவட்டம்அரசு ஊழியர்கள் கைவசம் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்?" – வரம்பு நிர்ணயிக்க உயர் நீதிமன்ற மதுரை...

அரசு ஊழியர்கள் கைவசம் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்?” – வரம்பு நிர்ணயிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆலோசனை!

-

- Advertisement -

லஞ்சத்தைக் கட்டுப்படுத்த பொதுவான வழிகாட்டுதல் தேவை நீதிபதி            B.புகழேந்தி அதிரடி கருத்து   அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும்போது தங்களிடம் வைத்திருக்கக்கூடிய ரொக்கப் பணத்திற்குப் பொதுவான வரம்பை நிர்ணயிப்பது குறித்துத் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.அரசு ஊழியர்கள் கைவசம் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்?" – வரம்பு நிர்ணயிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆலோசனை!

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் சார்பதிவாளராகப் பணியாற்றிய கலா என்பவர், கடந்த 2021-ஆம் ஆண்டு பணியின்போது கணக்கில் வராத ரூ.45,000 ரொக்கப் பணம் வைத்திருந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையின் திடீர் சோதனையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் தொடங்கப்பட்டது.

we-r-hiring

இந்த ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி கலா தாக்கல் செய்த மனு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி B. புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது மனுதாரர் தரப்பில், “சொந்தக் குடும்பத் திருமணச் செலவுக்காகவே அந்தப் பணத்தைக் கைவசம் வைத்திருந்ததாக” தெரிவிக்கப்பட்டது. அரசுத் தரப்பில், “பதிவுத்துறையின் சுற்றறிக்கைப்படி, பணியின் போது அலுவலர்கள் வைத்துள்ள பணம் தொடர்பான பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன” எனக் கூறப்பட்டது.

நீதிபதியின் கேள்விகளும் முக்கியக் கருத்துக்களும்:
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டதாவது:

பொதுவான அரசாணை இல்லை: பதிவுத்துறையில் மட்டுமே இதற்கான சுற்றறிக்கை உள்ளது. மாநிலத்தின் அனைத்துத் துறைகளிலும் உள்ள அரசு ஊழியர்களுக்கும் பொருந்தக்கூடிய பொதுவான வழிகாட்டுதல்களோ அல்லது அரசாணையோ (G.O.) இருப்பதாகத் தெரியவில்லை.

லஞ்சத்தைக் கட்டுப்படுத்த உதவும்: அரசின் பெரும்பாலான பரிவர்த்தனைகள் டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்ட நிலையில், அலுவலகத்திற்கு ஊழியர்கள் கொண்டு வரும் சொந்தப் பணத்திற்கு ஒரு குறிப்பிட்ட வரம்பை அரசு நிர்ணயிக்க வேண்டும். இத்தகைய நிபந்தனை விதிக்கப்பட்டால், அது அரசு அலுவலகங்களில் லஞ்ச ஊழலைக் கட்டுப்படுத்தப் பெரிதும் உதவும்.

தேவையற்ற துன்புறுத்தலைத் தடுக்கும்: முறையான வரம்பும் வழிகாட்டுதல்களும் இருந்தால், நேர்மையான அரசு ஊழியர்கள் லஞ்ச ஒழிப்புச் சோதனைகளின் போது தேவையின்றித் துன்புறுத்தப்படுவதில் இருந்தும் பாதுகாப்பைப் பெறுவர்.

அரசுக்குப் பிறப்பித்த உத்தரவு:
மாநிலத்தில் ஊழலற்ற நிர்வாகம் அமைய இது போன்ற வழிகாட்டுதல்கள் மிகவும் அவசியம் எனச் சுட்டிக்காட்டிய நீதிபதி:

தற்போது அந்தந்த அரசுத் துறைகளில் பணம் வைத்திருப்பது தொடர்பான வழிகாட்டுதல்கள் என்னென்ன?

அரசு ஊழியர்கள் கைவசம் வைக்கும் ரொக்கப் பணத்திற்குப் பொதுவான வரம்பை நிர்ணயித்து அரசாணை (G.O.) வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா?

இதுகுறித்துத் தமிழ்நாடு அரசின் மனிதவள மேலாண்மைத் துறையின் (HRM) முதன்மைச் செயலாளர் விரிவான கருத்துக்களுடன் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.

கயத்தாறு அருகே நிழற்குடை உணவகத்தில் பரபரப்பு: ஆம்னி பேருந்தில் 40 பவுன் நகை திருட்டு; மர்ம நபர்களுக்கு காவல் துறை தீவிர வலை வீச்சு!

 

MUST READ