Homeசெய்திகள்மாவட்டம்மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் புறக்கணிப்பா? – அரங்கேறும் குளறுபடிகளும், அதிர்ச்சி தரும்...

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் புறக்கணிப்பா? – அரங்கேறும் குளறுபடிகளும், அதிர்ச்சி தரும் மோசடிகளும்!

-

- Advertisement -

தமிழகத்தில் சமீபகாலமாக அரங்கேறும் பல்வேறு திடுக்கிடும் சம்பவங்கள் மற்றும் நிர்வாகக் குளறுடிகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா அழைப்பிதழில் எழுந்துள்ள சர்ச்சைகள் முதல், பல கோடிகளைச் சுருட்டிய கிரிப்டோ மோசடிகள் மற்றும் அதிர்ச்சியூட்டும் குற்றச் செயல்கள் வரை பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து விரிவாக அலசப்படுகிறது.

we-r-hiring

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: முதல் கோணல் முற்றிலும் கோணல்!

பாண்டியர்களின் பாரம்பரியமிக்கதும், உலகப் புகழ்பெற்றதுமான மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அழைப்பிதழ் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இறந்தவர் பெயர் பட்டியலில் இடம்பெற்ற வினோதம்: திருப்பனந்தாள் காசி மடத்தின் 21வது அதிபராக இருந்த கைலாை மாமுனிவர் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் கடந்த 2025 ஆகஸ்ட் மாதத்திலேயே முக்தி அடைந்த நிலையில், அவரது பெயர் தற்போதைய குடமுழுக்கு பங்கேற்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பழைய ஆவணங்களைச் சரிபார்க்காமல் கண்மூடித்தனமாக நகலெடுத்து இந்த அழைப்பிதழ் அடிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிர்ச்சி தரும் எழுத்துப்பிழைகள்: தமிழ் பக்தி இலக்கியத்தில் புகழ்பெற்ற வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் பெயர், அழைப்பிதழில் “வண்ண சமரம்” என்று முற்றிலுமாகத் திரித்து அமுக்கப்பட்டுள்ளமை தமிழ் வளர்ச்சி மற்றும் அறநிலையத்துறையின் பச்சையான கவனக்குறைவைக் காட்டுகிறது.

தமிழுக்கு எங்குள்ளது இடம்?: சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் நடக்கவுள்ள விழாவில் சமஸ்கிருத அர்ச்சகர்களுக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்படுவதும், தமிழ் ஓதுவார்களுக்கு உரிய இடமளிக்கப்படாததும் பக்தர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் சீட்டுக்கு 4 கோடி ரூபாய் பேரம்? முன்னாள் அமைச்சர் மீது பகீர் குற்றச்சாட்டு!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் அதிமுக சாட்டில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தன்னிடம் பல கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக தனவிமல் என்பவர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தேர்தலுக்கான பாதுகாப்புத் தொகையாகப் பெறப்பட்ட இந்தப் பணம், தேர்தல் முடிந்த பின்னரும் திருப்பித் தரப்படாமல் அச்சுறுத்தப் படுவதாகவும், தற்போது ஆளுங்கட்சி தரப்புடன் கைகோர்த்துக்கொண்டு மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்த விவகாரம் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் 30 கோடி ரூபாய் கிரிப்டோ மோசடி! சிக்கலில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள்!

கோயம்புத்தூரைத் தொடர்ந்து தற்போது மதுரையை மையமாகக் கொண்டு கோடிக்கணக்கான ரூபாய் மோசடிகள் அரங்கேறி வருகின்றன. ‘EQL’ என்ற போலி கிரிப்டோ நிறுவனம் மூலம், முதலீட்டுக்கு இரட்டிப்பு லாபம் தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறி, மதுரை, திண்டுக்கல், மேலூர் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 30,000-க்கும் மேற்பட்ட மக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் அதிக வட்டிக்குக் கடன் வாங்கிய மக்கள் இதில் ஏமாந்து நுகர்வோர் நீதிமன்றங்களையும் சைபர் கிரைம் காவல்துறை கதவுகளையும் தட்டி வருகின்றனர்.

90 அடியைத் தாண்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்: விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி!

MUST READ