விருதுநகர் மாவட்டம், உலகப் புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மற்றும் பால் சார்ந்த இனிப்பு வகைகளின் விலைகள் சர்க்கரை விலை உயர்வு காரணமாக இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளன.
முக்கியக் காரணங்கள்:
சந்தையில் மூலப்பொருட்களான சர்க்கரையின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு முதன்மையான காரணமாகப் பால்கோவா உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் உற்பத்திச் செலவு கூடியுள்ளதால் இனிப்புகளின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூட்டுறவு மற்றும் தனியார் உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய விலை விவரங்கள் (கிலோவில்):
பால்கோவா பழைய விலை ரூ.360 புதிய விலை – ரூ.400, உயர்வு ரூ.40
பால் அல்வா பழைய விலை ரூ.400 புதிய விலை – ரூ.450 உயர்வு ரூ.50
பால் கேக் – ரூ.50, திரட்டிப் பால் – ரூ.50
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்குப் புவிசார் குறியீடு (GI Tag) கிடைத்துள்ள நிலையில், இந்த திடீர் விலை உயர்வு இனிப்புப் பிரியர்களிடையே சிறு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், தரத்தை நிலைநிறுத்தவே இந்த விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.
