Homeசெய்திகள்ஹரிஷ் கல்யாண், இந்துஜா ஜோடி சேரும் புதிய படம்!

ஹரிஷ் கல்யாண், இந்துஜா ஜோடி சேரும் புதிய படம்!

-

- Advertisement -

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது.
நடிகர் ஹரிஷ் கல்யாண் தற்போது ஹிட் படங்களைக் கொடுத்து ரசிகர்களை அதிகமாக்கி வருகிறார். தற்போது ஹரிஷ் கல்யாண் பார்கிங் என்ற திரில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் நடிகை இந்துஜா கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார்.
பேஷன் ஸ்டுடியோவின் சுதன் சுந்தரம், எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், லவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் முழு படப்பிடிப்பும் சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைகிறது.
ராம்குமார் பாலகிருஷ்ணன், பலூன் படத்தை இயக்கிய கே.எஸ். சினிஷ் என்பவரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ