spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஹரிஷ் கல்யாண்- இவானா கூட்டணியின் எல்ஜிஎம்… கவனம் ஈர்க்கும் முதல் பாடல்!

ஹரிஷ் கல்யாண்- இவானா கூட்டணியின் எல்ஜிஎம்… கவனம் ஈர்க்கும் முதல் பாடல்!

-

- Advertisement -

தோனியின் தயாரிப்பில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் எல்ஜிஎம் திரைப்படத்தின் முதல் சிங்கள் வெளியாகி உள்ளது. பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தயாரித்து, நடித்த ‘அதர்வா தி ஆரிஜின்’ என்ற கிராபிக்ஸ் நாவலை எழுதியவர் ரமேஷ் தமிழ்மணி.

இவர் தற்போது தோனி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘எல் ஜி எம்‘ (LGM – let’s get married)
என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.இந்த படத்தில் நடிகை இவனா, நதியா யோகி, பாபு தீபா, பிரபல யூடியூபர்ஸ் விக்ரம் மற்றும் ஹரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

we-r-hiring

அம்மா மற்றும் வருங்கால மனைவி இருவரிடமும் சிக்கித் தவிக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் சமீபத்தில் இந்த படத்தின் டீசரை மகேந்திர சிங் தோனி மற்றும் சாக்ஸி சிங் தோனி இருவரும் இணைந்து வெளியிட்டனர்.

அதைத்தொடர்ந்து தற்போது மதன் கார்க்கி எழுதியுள்ள ‘சலனா சலனா’ எனத் தொடங்கும் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

மேலும் இந்த படத்தின் இயக்குனரான ரமேஷ் தமிழ்மணியே இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ