spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஹரிஷ் கல்யாண் நடிப்பில் எம்எஸ் தோனி தயாரிக்கும் புதிய படம்... லேட்டஸ்ட் அப்டேட்!

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் எம்எஸ் தோனி தயாரிக்கும் புதிய படம்… லேட்டஸ்ட் அப்டேட்!

-

- Advertisement -

தோனியின் தயாரிப்பில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி முதன்முறையாக சினிமா தயாரிப்பில் களம் இறங்கியுள்ளார். அவர் தோனி என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கியுள்ளார்.

we-r-hiring

அதில் முதன்முறையாக ஹரிஷ் கல்யாண் நடிப்பில் புதிய படத்தை தயாரிக்கிறார். தோனி தயாரித்து, நடித்த ‘அதர்வா தி ஆரிஜின்’ என்ற கிராபிக்ஸ் நாவலை எழுதிய ரமேஷ் தமிழ்மணி தான் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.

படத்திற்கு ‘எல்ஜிஎம்(LGM)’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை இவனா, நதியா யோகி, பாபு தீபா, பிரபல யூடியூபர்ஸ் விக்ரம் மற்றும் ஹரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

அம்மா மற்றும் வருங்கால மனைவி இருவரிடமும் சிக்கித் தவிக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

MUST READ