தலைகீழாக நின்றபடி 3 நிமிடங்களில் சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை பாடி 8 வயது சிறுவன் உலக சாதனை படைத்துள்ளான். இந்த அரிய யோகா சாதனையை [International Book of Records] அங்கீகரித்துள்ளது.
வெறும் 8 வயதே ஆன ஓம் என்ற சிறுவன், தனது அபாரமான திறமையால் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். மூச்சுக் கட்டுப்பாடு மற்றும் உடல் சமநிலை ஆகிய இரண்டையும் மிகச் சரியாகக் கையாண்டு, இவர் புதிய உலக சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். இந்தச் சிறுவன் சிரசாசனம் எனப்படும் தலைகீழாக நிற்கும் நிலையில் இருந்து இந்த சாதனையைச் செய்துள்ளார்.

முழு சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தையும் தலைகீழாக நின்றபடியே பாடி முடித்துள்ளார். இந்த முழு ஸ்தோத்திரத்தையும் பாடி முடிக்க அவர் எடுத்துக்கொண்ட நேரம் வெறும் 3 நிமிடம் 47 வினாடிகள் மட்டுமே. இந்த அசாத்திய முயற்சியின் மூலம் சிறுவன் ஓம், ‘International Book of Records’-ல் தனது பெயரைப் பதிவு செய்துள்ளார். இந்தச் சிறுவனின் விடாமுயற்சியும், கடினப் பயிற்சியும் இன்று அவரை ஒரு சர்வதேச சாதனையாளராக மாற்றியுள்ளது. இவரது இந்த சாதனை சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: தவிர்க்க முடியாது என ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை!
