Homeசெய்திகள்இந்தியாவிமானத்தில் பெண் பயணி மீது சக பயணி சிறுநீர் கழித்த விவகாரம்

விமானத்தில் பெண் பயணி மீது சக பயணி சிறுநீர் கழித்த விவகாரம்

-

- Advertisement -

ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது போதையில் இருந்த சக பயணி சிறுநீர் கழித்த விவகாரம்; பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 10 கோடி நஷ்டஈடு வழங்க பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2022, நவம்பர் 26ம் தேதி நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண் பயணி மீது போதையில் இருந்த சகபயணி ஒருவர் சிறுநீர் கழித்துள்ளதாக புகார் எழுந்தது.

we-r-hiring

இது தொடர்பாக சம்மந்தப்பட்ட பெண் பயணி, டாடா குழு தலைவர் என். சந்திரசேகரனுக்கு புகார் கடிதம் எழுதியதை தொடர்ந்து, போதையில் இருந்த பயணிக்க ஏர் இந்தியாவில் பயணிக்க 30 நாட்கள் தடைவிதிக்க பட்டது.

இதுதொடர்பாக, இந்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம், விசாரணை நடத்தி வருகிறது.

மேலும், டுவிட்டர் வலைதளத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அந்த நபர், கைது செய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

MUST READ