Homeசெய்திகள்இந்தியாசிவா சேனா கட்சி விவகாரம் - உச்சநீதிமன்றம் விசாரணை

சிவா சேனா கட்சி விவகாரம் – உச்சநீதிமன்றம் விசாரணை

-

- Advertisement -

சிவா சேனா விவகாரம், உத்தவ் தாக்கரே தரப்பு வழக்கை நாளை மாலை அவசர வழக்காக விசாரணை செய்கிறது உச்சநீதிமன்றம்.

சிவசேனா கட்சி இரண்டாக உடைந்த பிறகு ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையில் இரண்டு அணிகளாக உடைந்தது. இதனிடையே அந்தேரி கிழக்கு சட்டமன்ற தொகுதி அறிவிக்கப்பட்ட பிறகு கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை தங்கள் தரப்பு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இரு அணிகளும் தனி தனியாக இந்திய தேர்தல் ஆணையத்தை நாடினார்கள். இந்த விவகாரத்தில் சமீபத்தில் ஏக்நாத் ஷிண்டே அணியை சிவசேனாவாக அங்கீகரிப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

we-r-hiring

இதனிடையே உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி உச்சநீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணைய முடிவுக்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடர்ந்தனர். மேலும், வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு பட்டியலிட கோரிய நிலையில், இன்று மீண்டும் 2வது முறையாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முறையிட்டார்.

குறிப்பாக இந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கு தடை விதிக்கப்படவில்லை என்றால் சின்னம், வங்கி கணக்குகள் மற்றும் தகுதி நீக்கம் போன்ற நடவடிக்கைகளை ஏக்நாத் ஷிண்டே அணி எடுக்க நேரிடும் என தெரிவித்தார். தலைமை நீதிபதி உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் எனவும் வழக்கை  புதன் கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசுட் உறுதியளித்துள்ளார்.

MUST READ