Homeசெய்திகள்இந்தியாஅதானி குழுமம் நிறுவன பங்குகள் மீண்டும் சரிவு

அதானி குழுமம் நிறுவன பங்குகள் மீண்டும் சரிவு

-

- Advertisement -

அதானி குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் பங்குசந்தையில் மீண்டும் பெரும் சரிவை சந்தித்துள்ளன.

அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றச்சாட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து, அதானி கிரீன் எனர்ஜி பங்கு ரூபாய் 36 குறைந்து ரூபாய். 688 ஆகவும், அதானி பவர் பங்கு ரூபாய். 8 குறைந்து ரூபாய் 156 ஆகவும் சரிந்துள்ளன. அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு ரூபாய். 59 குறைந்து ரூபாய். 1127.35 ஆகவும் உள்ளன.

மேலும், அதானி டோட்டல் கேஸ் பங்கு ரூபாய். 63 குறைந்து ரூபாய். 1,192.65 ஆகவும் சரிந்துள்ளன. அதானி வில்மர் நிறுவன பங்கு ரூபாய். 21.80 குறைந்து ரூபாய். 416.65 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. அதானி போர்ட்ஸ் பங்கு ரூபாய் 18 குறைந்த ரூபாய் 56 ஆகவும், அதானி என்டர்பிரைசஸ் பங்கு ரூபாய். 88 குறைந்து ரூபாய் 1,758 ஆக உள்ளது. அம்புஜா சிமெண்ட்ஸ் பங்கு ரூபாய் 18 குறைந்து ₹342 ஆகவும், ஏசிசி பங்கு விலை ரூபாய் 72 குறைந்து ரூபாய். 1,808 ஆகவும் வர்த்தகம் பதிவாகியுள்ளது.

we-r-hiring

வளர்ச்சி இலக்கை பாதியாக குறைத்தது அதானி குழுமம்.
முறைகேடு புகாருக்கு உள்ளானதை அடுத்து வரும் நிதி ஆண்டிற்கான வளர்ச்சி இலக்கை பாதியாக குறைத்துள்ளது அதானி குழுமம். அதானி குழுமம் முறைகேடாக முதலீடு செய்துள்ளதாகவும் பங்கு வகைகளை செயற்கையாக உயர வைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதானி குழுமம் சட்டவிரோதப் பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகவும் முகமூடி நிறுவனங்களின் மூலம் முறைகேடு செய்ததாகவும் புகார் எழுந்தது.

MUST READ