பிரிகிக்ஸ் பிளஸ் (BRICS Plus) நாடுகளுக்கு இடையே சட்ட மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்தியாவின் தலைமை நீதிபதி சூர்ய காந்த் புதிய இரட்டைப் பார்வையை (Twin Vision) அறிமுகப்படுத்தியுள்ளார்.
புதிய கோட்பாடுகள் அறிமுகம்
சர்வதேச அளவில் சட்ட அமைப்புகளையும், பொருளாதார வளர்ச்சியையும் ஒரே நேர்க்கோட்டில் இணைக்கும் வகையில் ‘நியானாமிக்ஸ்’ (Nyanomics) மற்றும் ‘நியாய சேது‘ (Nyay Setu) ஆகிய இரு புதிய கோட்பாடுகளை அவர் உலகரங்கில் வெளியீடு செய்துள்ளார்.

திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்:
- நியானாமிக்ஸ் (Nyanomics): பொருளாதார வளர்ச்சியுடன் சட்டத்தின் ஆட்சியையும், நீதி நெறிமுறைகளையும் இணைத்துச் செயல்படுத்துவதன் மூலம் பிரிகிக்ஸ் நாடுகளுக்கு இடையே பரஸ்பர நம்பகத்தன்மையை மேம்படுத்துவது இதன் முதன்மை நோக்கமாகும்.
- நியாய சேது (Nyay Setu): உறுப்பு நாடுகளுக்கு இடையே சட்டப்பூர்வமானத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவும், வர்த்தக மற்றும் பொருளாதாரத் தடைகளைச் சட்ட ரீதியாக எளிதாக்கவும் ஒரு வலுவான பாலமாகச் செயல்படும் அமைப்பாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது.
சர்வதேச அளவில் நீதித் துறையின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு, உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு எவ்வாறு உதவும் என்பது குறித்து விரிவாகப் பேசப்பட்ட இந்த நிகழ்வு, சர்வதேச சட்ட மற்றும் பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் பெரும் கவனத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
ஜெய்ப்பூரில் தொழில்நுட்பக் கோளாறு: ஆயுர்வேத முதுநிலை நுழைவுத் தேர்வு மையம் ரத்து!
