Homeசெய்திகள்இந்தியாமருத்துவமனையிலிருந்து மாயமான சாட்சி மீண்டும் வருகை!.. கர்நாடக வனத்துறைக்குச் சுருக்குப் போடும் வாக்குமூலம்!

மருத்துவமனையிலிருந்து மாயமான சாட்சி மீண்டும் வருகை!.. கர்நாடக வனத்துறைக்குச் சுருக்குப் போடும் வாக்குமூலம்!

-

- Advertisement -

கர்நாடக மாநிலத்தில் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவத்தில், உயிர் தப்பிய ஒரே நேரடி சாட்சியான மகிமைதாசன் விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராகி அதிரவைக்கும் வாக்குமூலத்தை அளித்துள்ளார்.மருத்துவமனையிலிருந்து மாயமான சாட்சி மீண்டும் வருகை!.. கர்நாடக வனத்துறைக்குச் சுருக்குப் போடும் வாக்குமூலம்!

கடந்த 15-ஆம் தேதி சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் அருகே உள்ள சாக்யா வனப்பகுதியில், தோமையார்பாளையத்தைச் சேர்ந்த அந்தோணிசாமி, பீட்டர் மற்றும் குமார் ஆகிய மூவர் கர்நாடக வனத்துறையினரால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களுடன் சென்ற அதே கிராமத்தைச் சேர்ந்த மகிமைதாசன் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சம்பவத்திற்குப் பிறகு மைசூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகிமைதாசன், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் காணொளி வெளியிட்டுத் திடீரென மாயமானார். இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்த நிலையில், தற்போது போலீஸ் பாதுகாப்போடு அவர் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

we-r-hiring

விசாரணை அதிகாரியிடம் பரபரப்பு வாக்குமூலம்
இவ்வழக்கின் விசாரணை அதிகாரியான கொள்ளேகால் துணை ஆணையர் தினேஷ்குமார் மீனா ஐ.ஏ.எஸ். முன்னிலையில் ஆஜரான மகிமைதாசன் அளித்த வாக்குமூலத்தின் முக்கிய அம்சங்கள்:

  • மாடுகளைத் தேடி பயணம்: காணாமல் போன மாடுகளைத் தேடுவதற்காகவே அந்தோணிசாமியின் அழைப்பின் பேரில் அவர்கள் வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர்.

  • தூக்கத்தில் நடந்த கொடூரம்: இரவாகிவிட்டதால் அங்கிருந்த பாறை மீது படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தபோது, அதிகாலையில் வந்த வனத்துறையினர் எந்தவித கேள்வியும் கேட்காமல் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

  • உடல்கள் கடத்தல்: தான் சற்றுத் தனியாக நின்றதால் தப்பியோடி உயிர் பிழைத்ததாகவும், சுடப்பட்ட மூவரின் உடல்களையும் வனத்துறையினர் வாகனத்தில் ஏற்றிச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கின் ஒரே நேரடி சாட்சியான மகிமைதாசனைச் சம்பவ இடத்திற்கே நேரில் அழைத்துச் சென்று மறுவிசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இவரது வாக்குமூலம் வழக்கின் போக்கில் மிக முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

“மானை வேட்டையாடிய 3 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!” – கர்நாடக வனத்துறை அதிரடி: உறவினர்கள் சாலை மறியலால் பெரும் பரபரப்பு!

MUST READ