Homeசெய்திகள்இந்தியாமராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு மகாராஷ்டிர அரசு நோட்டீஸ்!

மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு மகாராஷ்டிர அரசு நோட்டீஸ்!

-

- Advertisement -

மகாராஷ்டிராவில் மராத்தி மொழி பேசத் தெரியாத 1,268 ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு மாநிலப் போக்குவரத்துத் துறை சார்பில் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

we-r-hiring

மராத்தி கட்டாயம்

மகாராஷ்டிராவில் வணிக ரீதியாக இயங்கும் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் ஓரளவாவது மராத்தி பேசத் தெரிந்திருக்க வேண்டும் என்பதை அம்மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றத்தை எளிதாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இந்த விதியை தீவிரமாக அமல்படுத்தும் வகையில், மாநிலம் தழுவிய சிறப்பு ஆய்வு நடவடிக்கையைப் போக்குவரத்துத் துறை தொடங்கியது. இதில் ஓட்டுநர்களிடம் மராத்தி மொழித் திறன் குறித்து 16 கேள்விகள் கேட்கப்பட்டுச் சோதிக்கப்பட்டது.

ஆய்வு முடிவுகள்

  • மும்பை பெருநகரப் பகுதி: 3,995 ஓட்டுநர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 604 பேருக்கு அன்றாடப் பயன்பாட்டிற்குத் தேவையான மராத்தி மொழித் திறன் இல்லை என்பது தெரியவந்தது.

  • இதர மாவட்டங்கள்: மாநிலத்தின் பிற பகுதிகளில் 4,222 ஓட்டுநர்கள் சோதிக்கப்பட்டதில் 664 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

  • மொத்த நோட்டீஸ்: முதற்கட்டமாக மொழித் திறன் இல்லாத மொத்தம் 1,268 ஓட்டுநர்களுக்குப் போக்குவரத்துத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அமைச்சர் எச்சரிக்கை

இது குறித்துப் பேசிய மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக், “ஓட்டுநர்கள் மொழியைக் கற்றுக்கொள்ளப் போதுமான கால அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த ஆய்வு நடவடிக்கை செப்டம்பர் 30 வரை தொடரும். குறிப்பிட்ட கெடுவுக்குப் பிறகும் விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.

இலவச மொழிப் பயிற்சி

ஆட்டோ-டாக்சி ஓட்டுநர்களுக்கு அரசு சார்பில் கடந்த மே 1 முதல் இலவச மராத்தி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மராத்தி அல்லாத சுமார் 1.5 லட்சம் ஓட்டுநர்கள் இதில் பங்கேற்ற நிலையில், இறுதித் தேர்வில் 7,750 பேரால் குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெற முடியவில்லை.

மும்பையில் இயங்கும் லட்சக்கணக்கான ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களில் பெரும்பாலானோர் பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘வந்தே மாதரம்’ சர்ச்சை: காங்கிரஸுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் கண்டனம்!

MUST READ