Homeசெய்திகள்இந்தியாமகாத்மா காந்தியின் கடிதங்கள் மற்றும் பொருட்கள் ரூ.16.20 கோடிக்கு ஏலம்: இந்திய வரலாற்று ஆவணங்களில் புதிய...

மகாத்மா காந்தியின் கடிதங்கள் மற்றும் பொருட்கள் ரூ.16.20 கோடிக்கு ஏலம்: இந்திய வரலாற்று ஆவணங்களில் புதிய சாதனை!

-

- Advertisement -

புதுடெல்லியில் நடைபெற்ற ஏலத்தில் மகாத்மா காந்தியின் கைப்பட எழுதப்பட்ட கடிதங்கள் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்கள் ரூ.16.20 கோடிக்கு விற்பனையாகிப் புதிய சாதனை படைத்துள்ளன. இந்திய வரலாற்று ஆவணம் ஒன்றுக்கு ஏலத்தில் கிடைத்த மிக அதிகபட்ச தொகை இதுவாகும்.

we-r-hiring

ஆனந்த் டி. ஹிங்கோரானியின் அரிய தொகுப்பு:

மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பரும், சுதந்திரப் போராட்ட வீரருமான ஆனந்த் டி. ஹிங்கோரானிக்கு காந்தியடிகள் உண்மை, அகிம்சை, சேவை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் குறித்து 688 பிரதிகளைத் தனது கைப்படக் கடிதமாக எழுதி அனுப்பியுள்ளார்.

  • இன்றைய சிந்தனை: ஹிங்கோரானியின் மனைவி வித்யா மறைந்த பின்னர், 2 ஆண்டுகளுக்கும் மேலாகக் காந்தியால் தினசரி எழுதப்பட்ட இந்தக் கடிதங்கள், ‘இன்றைய சிந்தனை’ என்ற பெயரில் புத்தகமாகத் தொகுக்கப்பட்டன.

  • ஏல விற்பனை: சாஃப்ரான் ஆர்ட் (Saffronart) நிறுவனம் சார்பில் நடைபெற்ற ‘காந்தி: ஆனந்த் டி ஹிங்கோரானியின் தொகுப்பிலிருந்து’ என்ற ஏலத்தில், இந்தக் கடிதங்கள் அடங்கிய 86 தொகுப்புகள் ரூ.16.20 கோடிக்கு விற்பனையாகின.

இது குறித்து சாஃப்ரான் ஆர்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் தினேஷ் வாசிராணி கூறுகையில், “காந்தியின் வாழ்க்கை மற்றும் சிந்தனைகளின் குறிப்பிடத்தக்க பதிவைப் பகிர்ந்து கொள்ள முடிந்ததில் பெருமையாக உள்ளது. காந்தி பொதுவெளியில் வலியுறுத்திய கொள்கைகளைத் தனது வாழ்க்கையில் எவ்வாறு கடைப்பிடித்தார் என்பதை அறிந்துகொள்ள இக்குறிப்புகள் அரிய வாய்ப்பை வழங்குகின்றன” என்றார்.

ஏலத்தில் விற்பனையான பிற முக்கியப் பொருட்கள்:

  • கடவுள் பற்றிய செய்தி: கடவுள் மற்றும் பகவத் கீதை குறித்த காந்தியின் சிந்தனைகள் அடங்கிய கடிதத் தொகுப்பு ரூ.1.68 கோடிக்கு விற்பனையானது.

  • பெட்டி சர்க்கா (ராட்டை): காந்தி பயன்படுத்திய ‘பெட்டி சர்க்கா’ எனப்படும் பெட்டி வடிவ ராட்டையும், ராட்டைச் சுழற்றுவதன் ஆன்மீக ஒழுக்கம் குறித்து அவர் எழுதிய இரண்டு கடிதங்களும் அடங்கிய தொகுப்பு ரூ.1.02 கோடிக்கு விற்பனையானது.

  • புகைப்படம்: காந்தி எழுதிக்கொண்டிருக்கும் கையெழுத்துடன் கூடிய அரிய புகைப்படம் ரூ.78 லட்சத்திற்கு ஏலம் போனது.

  • கடிதங்கள் & அஞ்சல் அட்டைகள்: பொருளாதார சுதந்திரம் தொடர்பான காந்தியின் கடிதங்கள், தந்திகள் மற்றும் அஞ்சல் அட்டைகள் ரூ.57.60 லட்சத்திற்கு விற்பனையாகின.

தெலங்கானாவில் சோகம்: விவசாயக் கிணற்றில் கார் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!

 

MUST READ