Homeசெய்திகள்இந்தியாஉச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு: சிவில் நீதிபதி பணி நியமனப் பயிற்சியில் முக்கிய மாற்றங்கள்!

உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு: சிவில் நீதிபதி பணி நியமனப் பயிற்சியில் முக்கிய மாற்றங்கள்!

-

- Advertisement -

இளநிலை சிவில் நீதிபதிகள் (Junior Civil Judges) நியமனத்திற்கான தகுதி மற்றும் பயிற்சி முறைகளில் அதிரடி மாற்றங்களைச் செய்து உச்சநீதிமன்றம் புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

we-r-hiring

முக்கியத் தீர்ப்பின் சிறப்பம்சங்கள்:

  • பயிற்சி காலம் குறைப்பு: சிவில் நீதிபதி தேர்வுக்கு விண்ணப்பிக்க வழக்கறிஞராக 3 ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டும் என்ற கட்டாய விதிமுறை, தற்போது 1 ஆண்டாகக் குறைக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

  • மாற்றுச் சட்டப் பணிகளுக்கு அங்கீகாரம்: வழக்கறிஞராக நேரடியாகப் பணியாற்றிய அனுபவம் மட்டுமின்றி, சட்ட உதவியாளராக (Legal Assistant/Clerk) பணியாற்றிய காலத்தையும் இந்த ஓராண்டு அனுபவமாக எடுத்துக் கொள்ளலாம்.

  • அமலுக்கு வரும் காலம்: 2027 ஏப்ரல் 1 முதல் வெளியிடப்படும் அனைத்து ஜூனியர் சிவில் நீதிபதிப் பணியிடங்களுக்கான அறிவிப்புகளுக்கும் இந்த புதிய விதிமுறைகள் பொருந்தும்.

புதிய பயிற்சி கட்டமைப்பு (Post-Selection Training):

தேர்வு செய்யப்படும் நீதிபதிகளுக்குப் பின்வரும் முறையில் தீவிர பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது:

  • மாநில நீதித்துறை அகாடமி: 1 ஆண்டு கால தீவிர நிறுவனப் பயிற்சி (Institutional Training).

  • மாவட்ட/அமர்வு நீதிமன்றப் பயிற்சி: மாவட்ட அல்லது அமர்வு நீதிபதியின் கீழ் 6 மாத காலம் களப்பயிற்சி.

  • உயர்நீதிமன்றப் பயிற்சி: உயர்நீதிமன்ற நீதிபதியின் கீழ் 6 மாத காலம் சட்ட உதவியாளர் பயிற்சி.

உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு:

உயர்நீதிமன்றங்கள் மற்றும் சட்டப் பல்கலைக்கழகங்களின் ஆலோசனைகளைப் பெற்றே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து உயர்நீதிமன்றங்களும் இந்தத் தீர்ப்பிற்கு ஏற்ப தங்களின் நீதித்துறை பணி நியமன விதிகளை (Judicial Service Rules) 3 மாதங்களுக்குள் திருத்தி அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளது.

வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மீது அமித் ஷா, தேவேந்திர பட்னாவிஸ் கடும் விமர்சனம்!

MUST READ