Homeசெய்திகள்இந்தியாஐபோன் தவணை முறை பணத்துக்காக ஏற்பட்ட தகராறு: மகாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மலையிலிருந்து...

ஐபோன் தவணை முறை பணத்துக்காக ஏற்பட்ட தகராறு: மகாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மலையிலிருந்து விழுந்து உயிரிழப்பு!

-

- Advertisement -

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் பகுதியில் ஐபோன் வாங்கியதற்கான மாதத் தவணை (EMI) பணம் செலுத்துவது தொடர்பாகக் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில், 18 வயது இளைஞரும், அவரை மீட்க முயன்ற அவரது பெற்றோரும் மலையிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஐபோன் பிடிவாதமும் தகராறும

we-r-hiring

குணால் என்ற அந்த இளைஞர் ஐபோன் வாங்கியிருந்த நிலையில், அதற்கான தவணைப் பணத்தைக் கேட்டு தன் பெற்றோரிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனால் தந்தை முரளிதருக்கும் அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய குணால், திசகான் பகுதியில் உள்ள ஒரு மலையின் விளிம்பில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

3 மணி நேரப் போராட்டம்

உடனடியாக அங்கு வந்த அவரது பெற்றோரும் பொதுமக்களும் சுமார் மூன்று மணி நேரம் போராடி, ஐபோன் வாங்கித் தருவதாகக் கூறி அவரிடம் கண்ணீருடன் கெஞ்சிக் கேட்டுள்ளனர். ஆனால், தற்கொலை செய்துகொள்வதே ஒரே வழி என்று குணால் பிடிவாதமாக இருந்துள்ளார்.

சோகத்தில் முடிந்த மீட்பு முயற்சி

சமரச முயற்சி தோல்வியடைந்த நிலையில், குணாலின் தந்தை அவரைப் பிடித்து இழுக்க முயன்றபோது இருவரும் நிலைதடுமாறி பள்ளத்தாக்கில் விழுந்தனர். தன் கண் முன்பே கணவரும் மகனும் விழுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் சங்கீதாவும் அதே மலையிலிருந்து கீழே குதித்து பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு மகாராஷ்டிர அரசு நோட்டீஸ்!

 

MUST READ