Homeசெய்திகள்இந்தியா2024 தேர்தலுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் தயராக வேண்டும் - பிரியங்கா காந்தி

2024 தேர்தலுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் தயராக வேண்டும் – பிரியங்கா காந்தி

-

- Advertisement -

காங்கிரசின் வாக்குறுதிகளையும், பாஜக அரசின் தோல்விகளையும் 2024 தேர்தலுக்குள் மக்களிடம் காங்கிரஸ் தொண்டர்கள் எடுத்து செல்ல வேண்டும் என்று  பிரியங்கா காந்தி கேட்டுக் கொண்டார்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85வது தேசிய மாநாடு நடைபெற்று வரும் நிலையில் இறுதி நாளான இன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உரையாற்றினார்.

we-r-hiring

அதில் எதிர்க்கட்சிகள், பாஜக சித்தாந்தத்திற்கு எதிராக உள்ளவர்கள் ஒன்றிணைய வேண்டும். குறிப்பாக இந்த எதிர்பார்ப்பு காங்கிரஸ் கட்சியிடம் தான் அதிகம் இருப்பதாக குறிப்பிட்ட பிரியங்கா காந்தி, 2024 மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலம் மட்டுமே உள்ளதால் “ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளையும்! மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தோல்விகளையும்!!” மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும், பாரதிய ஜனதா கட்சி எதிர்த்து போராடக்கூடிய தைரியம் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கு இருப்பதாகவும், அந்த தைரியத்தை வெளிப்படுத்த வேண்டிய முக்கியமான தருணம் வந்துவிட்டதாக கூறிய பிரியங்கா காந்தி, மண்டல மாவட்டத்திலிருந்து காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டிய பணிகளை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

MUST READ