Homeசெய்திகள்இந்தியா“எங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்.. போராட்ட வீடியோக்களை பார்க்க நேரமில்லை!”: வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த்...

“எங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்.. போராட்ட வீடியோக்களை பார்க்க நேரமில்லை!”: வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அதிரடி பதில்

-

- Advertisement -

போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது டெல்லி காவல்துறை கடுமையான அடக்குமுறையைக் கையாள்வதாக முறையிட்ட வழக்கறிஞரிடம், “நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்காதீர்கள்; போராட்ட வீடியோக்களை திரையிட்டுப் பார்ப்பதில் எங்களுக்கு விருப்பமும் இல்லை, அதற்கான நேரமும் இல்லை” என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் காட்டமாகக் தெரிவித்துள்ளார்.“எங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்.. போராட்ட வீடியோக்களை பார்க்க நேரமில்லை!”: வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அதிரடி பதில்

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மீது காவல்துறை மிதமிஞ்சிய பலத்தைப் பயன்படுத்துவதாகவும், இது தொடர்பான வீடியோ ஆதாரங்களை நீதிமன்றம் பார்வையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி வழக்கறிஞர் தரப்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. போராட்டத்தின் போது காவல்துறையினர் நடந்துகொண்ட விதம் தொடர்பான காணொளிகளை (Video Footage) நீதிமன்ற அறையிலேயே திரையிட்டுக் காட்ட அனுமதிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.

we-r-hiring

தலைமை நீதிபதியின் காட்டமான கருத்து
இந்த முறையீட்டைச் செவிமடுத்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்க மறுத்துத் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். “நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடிக்காதீர்கள். இதுபோன்ற போராட்ட வீடியோக்களை உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பதற்கு எங்களுக்கு விருப்பமும் இல்லை, அதற்கான நேரமும் உச்சநீதிமன்றத்திடம் இல்லை. முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி மனுவாகத் தாக்கல் செய்யுங்கள்.” என தலைமை நீதிபதி சூர்யகாந்த் அறிவுறுத்தினாா். “எங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்.. போராட்ட வீடியோக்களை பார்க்க நேரமில்லை!”: வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அதிரடி பதில்நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்
நேரடியாக உச்சநீதிமன்றத்தில் இதுபோன்ற முறையீடுகளைத் தொடுப்பதற்குப் பதிலாக, சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தையோ அல்லது உரிய சட்டப் பிரிவுகளின் கீழோ அணுக வேண்டும் என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். காணொளிகளை நீதிமன்றத்தில் திரையிட்டு விசாரணையைத் திசைதிருப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், உரிய ஆதாரங்களுடன் முறையான மனுவாகத் தாக்கல் செய்தால் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அமர்வு தெளிவுபடுத்தியது. தலைமை நீதிபதியின் இந்த அதிரடி கருத்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் முற்றும் ‘காக்ரோச்’ மாணவர்கள் போராட்டம்: மத்திய அரசுக்கு நெருக்கடி – நேபாளம், இலங்கை பாணி ஆட்சி மாற்றப் பதற்றம்!

MUST READ