spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாH1B விசா கட்டணம் உயர்வு - டிரம்ப் அதிரடி உத்தரவு

H1B விசா கட்டணம் உயர்வு – டிரம்ப் அதிரடி உத்தரவு

-

- Advertisement -

H1B விசாக்களுக்கான கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.H1B விசா கட்டணம் உயர்வு - டிரம்ப் அதிரடி உத்தரவுஅமெரிக்காவில் தங்கி பணிபுரிந்து வரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு H1B விசா தரப்படுகிறது. H1B விசா மூலம் ஏராளமான இந்தியர்கள் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகின்றனர். அமெரிக்காவின் H1B விசா பெற இனி ஆண்டுதோறும் $1,00,000 (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும். செப்டம்பா் 21 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய உத்தரவு, அடுத்த 12 மாதங்களுக்கு செயலில் இருக்கும். உத்தரவை நீட்டிப்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும். வேலைவாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கில் இது செயல்படுத்தப்படுகிறது.
H1B விசாக்களை பயன்படுத்தும் நாடுகளில் 71 சதவீதத்துடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. H1B விசா கட்டண உயர்வால் இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் வேலை பார்க்க வேண்டும் என இந்தியர்களின் கனவும் தகரும் நிலை ஏற்பட்டுள்ளது.

அவரு நிறைய பண்ணிட்டாரு…. அனிருத் குறித்து சாய் அபியங்கர்!

we-r-hiring

 

MUST READ