சாய் அபியங்கர், சமீபத்தில் நடந்த பேட்டியில் அனிருத் குறித்து பேசி உள்ளார்.
பிரபல பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணி ஆகியோரின் மகன்தான் சாய் அபியங்கர். இவர் ‘ஆசை கூட’, ‘கட்சி சேர’ ஆகிய சுயாதீன பாடல்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். தற்போது இவர் பெரிய ஹீரோக்களின் படங்களிலும் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். அந்த வகையில் அட்லீ – அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்ட படத்தில் இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளார்.இது தவிர சூர்யாவின் கருப்பு, பிரதீப் ரங்கநாதனின் டியூட் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இன்னும் சில படங்களிலும் ஒப்பந்தமாகி வருவதாக சொல்லப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் சாய் அபியங்கர், அனிருத்துடன் போட்டி போடுகிறார் என பல தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. ஏனென்றால் கடந்த பல வருடங்களுக்கு முன்பிலிருந்து அனிருத் தான் பல ஹிட் பாடல்களை கொடுத்து இளைஞர்களின் ஃபேவரைட்டாக இருந்தார். ஆனால் தற்போது அவருடைய இடத்தை சாய் அபியங்கர் பிடித்திருக்கிறார்.
#SaiAbhyankkar Recent
– #Anirudh sir has already achieved so much, while I’ve just started my journey.
– With all your blessings, my only focus is to work hard and keep growing.
– There’s no competition between us, I still have a long way to go.#Dudepic.twitter.com/6Rbcj1bTeC— Movie Tamil (@_MovieTamil) September 19, 2025

இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் நடந்த பேட்டியில் சாய் அபியங்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “அனிருத்லாம் நிறைய பண்ணிட்டாரு. நான் இப்பதான் ஸ்டார்ட் பண்ணி இருக்கேன். உங்கள் அனைவரின் ஆசிர்வாதத்துடன் நான் கடுமையாக உழைக்கவும், வளரவும் முயற்சி செய்கிறேன். மற்றபடி எனக்கும் அனிருத்துக்கும் இடையில் போட்டி கிடையாது” என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.